தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், கட்சி பணிகளை ஒருங்கிணைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர தலைமை அனுமதி அளித்தது. அதன்படி அவர் லண்டன் புறப்பட்டுசென்று விட்டார்; நவம்பர் இறுதியில் தான் தமிழகம் திரும்ப உள்ளார்.
இந்நிலையில், அண்ணாமலை திரும்ப வரும்வரை தமிழக பா.ஜ.,வை நிர்வகிக்க எச்.ராஜா உட்பட 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளராக ராஜா செயல்படுவார். குழுவில் சக்கரவர்த்தி, கனகசபாபதி, முருகானந்தம், எஸ்.ஆர்.சேகர், ராம சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கட்சியின் செயல்பாடுகள், முக்கிய முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்யும். ஒவ்வொரு உறுப்பினரும், ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்து வழிநடத்துவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |