மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி
பா.ஜ.க. கோவை மாவட்ட தலைவர் திரு. சி.ஆர். நந்தகுமார் அவர்கள் இல்லத்தின் மீது பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டு வீசியிருப்பது கோழைத்தனமானது, கடுமையான கண்டனத்திற்குரியது. இதை தான் நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கின்றேன், தமிழகத்தில் பயங்கரவாதிகளுடைய பயிற்சி முகாம்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும், அதை தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றேன்.
துரதிர்ஷ்ட வசமாக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், அரசாங்கமும் கூட அதை ஒரு பொருட்டாக எடுத்ததாக தெரியவில்லை.
தமிழக அரசாங்கம் இதை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும், சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது நிச்சயமாக அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் மிகப்பெரிய தீங்கு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஒரு பேரழிவை தருவதாக அமைந்துவிடக் கூடும்.
ஆகவே உடனடியாக தமிழகத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் மீது துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
காவல்துறையை சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகள் மீது எடுக்க கூடிய நடவடிக்கைகள் என்ன என்று அவ்வப்போது தமிழக அரசாங்கத்தினால் கவனிக்கப் பட வேண்டும். காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்களோ அதற்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலும், காவலர்களும் பாதுகாப்பாக இருக்கும்படியான வகையிலும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும், அதற்கென்று தனி கவனங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு தமிழக அரசாங்கம் எல்லா நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
– திரு. பொன். இராதாகிருஷ்ணன்
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.