கர்நாடக சட்ட சபை தேர்தல் வருகிற மே மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் அரசியல் கட்சிகள் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. இதற்கிடையே பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று கர்நாடகம் வந்தார். மைசூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் நேற்று மாலை 4 மணிக்கு கொள்ளேகாலுக்கு ஹெலிகாப்டரில் வந்தார். அவருடன் மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, மத்திய மந்திரி அனந்த குமார் உள்பட பலர்வந்தனர். கொள்ளேகால் டவுனில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள்(பா.ஜனதாவினர்) செல்லும் இடமெல்லாம் மோடி அலை வீசுகிறது. கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரசார் குடிசைபோட்டு அமர்ந்துள்ளனர். பா.ஜனதாவின் மோடி அலையால் காங்கிரசாரின் குடிசைகள் காணாமல் போய்விடும். மைசூருவில் ராஜூ என்பவர் கொலை செய்யப் பட்டுள்ளார். அவரது கொலையில் தொடர்புடையவர்களுக்கு உரியதண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு குவெம்பு, விஸ்வேசு வரய்யாவின் ஜெயந்திகளை கொண்டாடுவது இல்லை. ஆனால் திப்பு ஜெயந்தியை கொண்டாடு கிறார்கள். இது ஏன்?. தாங்கள் சாதி, மதம் பார்ப்பது இல்லை என்று பேசிக்கொள்ளும், காங்கிரசார் ஏன் இந்த பாரபட்சத்தை பின்பற்றுகிறார்கள். ஓட்டுக்காக காங்கிரசார் என்ன வேண்டு மானாலும் செய்வார்கள்.
இதுவரை ஏமாற்றியது போல, இனி காங்கிரஸ் கட்சியினர் மக்களை ஏமாற்றமுடியாது. கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சிதேர்தலில் வெற்றி பெறாது. சாம்ராஜ்நகர் மாவட்டத்தை காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று காங்கிரசார் பெருமையாக பேசுகிறார்கள். இனி அதுநடக்காது. இனி சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் காங்கிரஸ் வெற்றிபெறாது. அதற்காக தொண்டர்கள் அனைவரும் தீவிரமாக பாடுபட வேண்டும்.
இன்னும் பலமுறை கர்நாடகத்தில் நான் சுற்றுப் பயணம் செய்வேன். நாட்டில் 23 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சிசெய்கிறது. வருகிற தேர்தலில் கர்நாடகத்திலும் பா.ஜனதாவின் ஆட்சியை அமைக்க தொண்டர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். காங்கிரஸ் இல்லாத நாடு விரைவில் உருவாகும். காங்கிரஸ் ஆட்சிநடக்கும் கர்நாடகத்தில் தான் ஊழல் அதிகளவில் உள்ளது.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.