மத்திய அரசின் தேசிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தை அமலாக்கு வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பிரதமர் நரேந்திரமோடி நேற்று ஆய்வு செய்தார்.
நிகழ் நிதியாண்டுக்கான பட் ஜெட் தாக்கலின் போது, தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்தத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் காப்பீட்டு வசதியைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தில் சேரும் பயனாளிகள், ஆண்டுக்கு ரூ.5 லட்சம்வரை காப்பீடு பெற்றுக் கொள்ளமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று இத்திட்டம் அமல்படுத்தப் படும் என மத்திய அரசுசார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தை அமல்படுத்து வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வுசெய்தார். அப்போது, இத்திட்ட அமலாக்கத்துக்காக இதுவரை நடந்து முடிந்த பணிகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பைச்சேர்ந்த உயரதிகாரிகள் விளக்கினர்.
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.