பிரதமர் மோடி 4 ஆண்டுகளில் தோல்வி, தோல்விதான் எதுவும் செய்யவில்லை என்று 100 காரணங்கள் லிஸ்ட் போட்டு பரப்புகிறார்கள் சிலர்.
நக்கீரன் போன்ற பத்திரிகைகள் 10 கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத மோடி அரசு என்று வசைபாடுகின்றன.
இன்னும் சிலர் மோடி செய்த வேதனை என்று மக்கள் பட்ட துன்பங்களைப் பாருங்கள் என்று ஒரு 100 காரணங்கள் லிஸ்ட் போட்டு அனுப்புகிறார்கள்.
{100பட்டியலிட்ட அந்த நபர் யார் என்று தெரியவில்லை. அவர் இஷ்டத்துக்கு ரேசன் மானியம் நிறுத்தம், அதானி அம்பானி , யோகா , தேசபக்தி, ஜியோ சிம், லலித் மோடி என்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல லிஸ்ட் போட்டு இருக்கிறார்கள். இதில் முடிந்தால் பதில் வேண்டும் என்று சவால் வேறு!.}
இங்கே மத வெறி மூலமும் , வெறுப்பு அரசியல் மூலமும் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக வம்படியாகப் பிரச்சாரங்கள் நடக்கிறது. அதைப் பத்திரிகைகள் முன்னின்று செய்கின்றன.
நான் மக்களைக் கேட்பது இது தான். வெறுப்பை மனதில் இருந்து விரட்டுங்கள் – யார் மீதும் வெறுப்பு வேண்டாம். நான் 100 காரணங்கள் ஆதாரத்துடன் முன்வைக்கிறேன். அது சரியா என்று பொறுமையாகப் படித்து முடிவு செய்யுங்கள் நரேந்திர மோடி தனது பணியை நல்லவிதமாகத் தான் செய்துள்ளாரா இல்லையா என்று.
சும்மா whatsapp, Facebook எவனது எதையாவது அனுப்பி அதை நம்புவதை நிறுத்திவிட்டு உண்மை எது என்று பொறுமையாகச் சிந்தியுங்கள்.
1) பால் உற்பத்தியில் 2013ல் மன்மோகன் அரசு விட்டுச் செல்லும் போது ஒரு நாளைக்கு 307 gm/day என்ற அளவில் இருந்தது கடந்த 3.5 வருட மதிப்பிடின் படி இது ஒருநாளைக்கு 351 gm/day. அதாவது 24% அளவிற்கு வளர்ச்சியைச் சாதித்துக் காட்டியுள்ளார் மோடி. இதன் மூலம் 132 Milion Tonnes என்று இருந்த மொத்த ஆண்டு உற்பத்தி இன்று 166Milion Tonnes என்று கூடியுள்ளது. காரணம் பால் உற்பத்தியிலும் முட்டை உற்பத்தியிலும் மோடி மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் சீர்திருத்த வேலைகள். {ஆதாரம் National Dairy Development Board கேட்டு வாங்கிப் பார்க்கவும்}
2) கடந்த 3ஆண்டுகளில் 7.25 கோடி soil health cards விவசாய மண் பரிசோதனை செய்து அதற்குத் தக்க விவசாயம் இயற்கை விவசாய முறை ஊக்குவிக்க – 7.2லட்சம் ஹெக்டர் நிலம் என்று இருந்த அளவை இவர் ஆட்சிக் காலத்தில் 20லட்சம் ஹெக்டேர்அளவிற்குக் கூட்டி உள்ளார். (அதே நேரம் அறிவியல் சார்ந்த விசயங்களையும் தேவைக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளும் தன்மையும் உண்டு}
3) மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பில் 100நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் இருந்து சுமார் 87லட்சம் போலி கார்டுகளை நீக்கியுள்ளார். இதன் மூலம் அரசுக்குத் தினமும் 87கோடி இழப்பினை சரி செய்துள்ளார். (வறட்சி பாதித்த மாவட்டங்கள் பகுதிகளில் 150நாள் வேலைத் திட்டமும் கூட்டியுள்ளனர்.) {ஒரு நிர்வாகி என்பவர் புதுப் புதுத் திட்டங்கள் போடுவது அல்ல விஷயம். இருக்கும் திட்டத்தில் உள்ள வேட்டைகளைச் சரி செய்ய வேண்டும். அது தான் நல்ல நிர்வாகிக்கு அழகு. (அவர் அதைச் சரி செய்தார் ஆனால் மக்கள் 100நாள் வேலை திட்டம் என்று சும்மா பேசிவிட்டு வந்து காசு வாங்குகிறார்களே – அதைத் தவறு என்று கண்டித்து எந்த டீவி விவாதம் செய்தான்?)
4) World Health Organization கூறுகிறது உலகத்தில் சுமார் 30கோடி மக்கள் தூய்மை இல்லாத காற்றைச் சுவாசிக்கிறார்கள். இதுவே பெரும் நோய்களுக்கும் சுவாச பிரச்சனைகளுக்கும் கரணம் ஆகிறது. இந்தியாவில் 2016 கிராமப்புற மகளிருக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்கும் திட்டம் தொடங்கி 1வருடத்தில் 1.5 கோடி இணைப்புகள் வழங்க ஆணையிட்டார் மோடி. ஆனால் 2கோடி(2017) இணைப்புகளை வழங்கிச் சாதித்தார். இதன் மூலம் விறகு , மண்ணெண்ணெய் எரித்துச் சுவாச கோளாறு கொண்ட நிலை மாறியுள்ளது. இதை World Health Organization முன் வந்து பாரட்டயுள்ளது.
5) நாட்டின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தி 2016-17 ஆம் ஆண்டுத் தகவல்படி 27.338 கோடி டன். இது மன்மோகன் விட்டுச் செல்லும் போது 25கோடி டன் தான். {நாடு சோமாலியா ஆகும் என்று எவனாது சொன்னா பிடிச்சு நாளு அப்பு அப்புங்க. சும்மா whatsapp facebook என்று வரும் எந்தச் செய்தியையும் நம்பாமல் முறையாக அறிக்கைகளைக் கொஞ்சம் தேடி படிங்க.} அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி கேட்பது தவறு என்பது இதன் மூலம் புரியும். விவசாயம் பொய்த்து போகும் பொது என்ன அரசு உதவியது???
6) ஓய்வூதியம் ஆரம்பித்துக் கேஸ் மானியம் வரை அனைத்தையும் நேரடியாக மக்கள் வங்கி கணக்கில் செலுத்துகிறது அரசு. இல்லை நமது அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தே சாகவேண்டும்.
7) நரேந்திர மோடி வருவதற்கு முன் அனைவருக்கும் தெரியும் இங்கே மின்சாரம் எந்த அளவிற்குப் போய்ப் போய் வரும் என்று. ஆனால் இன்று??? காரணம் 2014ல் ஆட்சிக்கு வரும் வரை நாட்டின் 24க்கும் மேற்பட்ட thermal power plant தேவையான நிலக்கரியில் மூன்றில் இரண்டு பங்கு தட்டுப்பாடு இருந்தது. காரணம் நிலக்கரி நேரத்திற்குச் சென்று சேராமல் சுரங்கங்களில் நிற்பது. ஆனால் இன்று???? அது 100% சரி செய்துள்ளனர். எந்த ஒரு power plant தேவையான நிலக்கரி தேவை முழுவதும் நேரத்திற்குக் கிடைக்கவும் கையிருப்பு வைத்துக் கொள்ளவும் தனிக் கவனம் கொடுத்துள்ளார் மோடி. அதனால் தான் இங்கே ஒழுங்கா மின்சார உற்பத்தி நடக்கிறது. கொஞ்சம் தகவல் வேண்டும் என்றால் NTPC அலுவலகத்தை அணுகவும். நாட்டின் இன்றைய மின்சார உற்பத்தித் திறன் : 344,002 மெகா வாட்.மன்மோகன் விட்டுச் செல்லும் போது அது வெறும் 199,877 மெகா வாட் தான். (இந்த லின்கேஜ் பாதையை முறைப்படுத்தி ஆண்டுக்கு 3000கோடி இழப்பையும் சரி செய்துள்ளார் மோடி.}
8) மின்சார உற்பத்தியில் மட்டும் சாதனை அல்ல. உலகம் முழுவதும் நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்கிறார்கள். காரணம் உலக வெப்பமயமாதல். எனவே மன்மோகன் ஆட்சிக் காலத்தில் ஏறக்குறைய நாட்டின் தேவையில் 75% மின்சாரம் நிலக்கரி மூலம் தான் செய்தோம். ஆனால் இன்று Installed capacity பாருங்கள் 57.7% தான் நிலக்கரி மூலம் மேற்கொள்கிறோம் என்று புரிகிறது. ஆக மக்கள் மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்தது மட்டும் அல்ல அதைச் சுற்று சூழல் ஆபத்தைக் குறைக்கும் விதமாகவும் சாதித்து உள்ளனர். இதை எந்தச் சுற்று சூழல் ஆர்வலர் பாராட்டினான் இங்கே??? {இந்தியாவில் அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் மின்சாரத் திருட்டு சர்வ சாதாரணம். இப்போது அதை எந்த அளவிற்குக் குறைத்துள்ளார் என்று கொஞ்சம் தேடிப் படியுங்கள்.}
9) இந்திய இன்று சூரிய ஒளியின் மூலம் உற்பத்தி செய்யும் அளவு 25.90 billion units. மன்மோகன் அரசு விட்டுச் செல்லும் போது 1.6 billion unitsதான் சோலார் பயன்பாடு. அது தவற 50% மானியம் தருகிறார்கள் சோலார் மின்சாரப் பயன்பாட்டை நோக்கி மக்கள் செல்ல. கல்வி நிலையங்கள் ஆரம்பித்துப் பெரிய நிறுவனங்கள் வரை சோலார் பயன்பாட்டை அதிகப்படுத்த மானியம் கொடுக்கிறது அரசு.
10) மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின் உஜாலா திட்டம் மூலம் LED லைட்டுகள் விநியோகம் ஆரம்பித்து வைத்தது. மானிய விலையில் மிகக் குறைந்த விலையில். அன்று இது என்ன திட்டம் என்று கேலி கிண்டல் எல்லாம் வழக்கமாக வந்ததுவே. ஆனால் மார்ச் 24, 2018 வரையில் நாடு முழுவதும் சுமார் 29,30,45,393 எல்.இ.டி விளக்குகளை விநியோகம் செய்துள்ளது அரசு. அதன் மூலம் 3,08,26,110 டன் கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தி உள்ளது அரசு. யார் செய்த தவற்றை யார் சரி செய்தார்? மக்கள் எல்லோரும் சேர்ந்து செய்த தவற்றைப் பிரதமர் சரி செய்கிறார். தமிழகத்திலும் இந்தப் பல்புகள் கொடுத்தனர் என்ன சத்தம் இல்லாமல் மோடி பெயர் வெளியை வரவிடாமல் கொடுத்தனர். 27கோடி மரங்கள் சேர்ந்து செய்யவேண்டிய ஒரு பணியைப் பிரதமர் தன் திட்டம் மூலம் செய்துள்ளார். இந்த மிகப்பெரிய செய்தியை யார் வெளியே சொன்னார்கள்???
11) தொழில் துறை வளர்ச்சி சார்ந்து உலகத்தின் மிகப் பெரிய asset manager நிறுவனமான BlackRock Inc.& DSP இணைத்து வெளியிட்ட தகவல்படி இந்தியாவின் தற்போதைய மோடி அரசின் கீழ் முதலீடு செய்ய ஏதுவான சூழல் 81% திருப்தியாக இருப்பதாகவும், வேலைத் திறன் மேம்பாடு 54% மேம்பட்டுள்ளதாகவும் சான்றிதழ் தருகிறது. இது உலக அளவில் முதலீட்டாளர்கள் தொழில் முனைவோர் மத்தியில் நம் நாட்டின் மீதான தற்போதைய பார்வையைப் பிரதிபலிக்கிறது. காரணம்? மிக மிகக் குழப்பமான வரி வசூல் முறையை முழுமையாக ஒழித்து ஜி.எஸ்.டி மூலம் தொழில் நடத்தும் அனைவரையும் நிம்மதி மட்டும் அல்ல பெரும் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் மோடி.
12) ஏறக்குறைய 24,000 NGOகள் தொண்டு செய்கிறேன் பேர்வழி என்று நாட்டில் ஆபத்தான மதம் மாற்றுவது முதல் நாட்டின் பிரிவினைவாத விதைகளை விதைத்து வந்த கேடுகெட்ட உழைக்காமல் வாழ்ந்த பெரும்பாலான வழிகள் மூடப்பட்டன. இன்றைய நிலையில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது முற்றிலும் கண்காணிப்புக்குள் கொண்டுவதுள்ளது அரசு. 3,068 தொண்டு நிறுவனங்கள் மட்டும் சுமார் 22ஆயிரம் கோடி வருடம் வருடம் நன்கொடைகளை வெளிநாடுகளில் இருந்து பெற்று வந்தனர். தமிழ் நாட்டில் ஒரு கிறிஸ்தவ நிறுவனம் மட்டும் 2011-12ல் 233.38 கோடி நிதி பெற்றது. எதற்கு?? அதான் அணுஉலை உதயகுமார் முதல் அனைத்துக் கிறிஸ்தவ மதம் மாற்றும் NGOகள் அதன் கூட்டத்தினர் கதறுகிறார்கள். இது உண்மை இல்லையா?
13) அனைவரும் கொஞ்சம் நாட்டின் வரலாற்றில் தீவிரவாதிகள் தாக்குதலை எடுத்துப் பாருங்கள் வெட்ட வெளிச்சமாகத் தெரியும் நிர்வாகத் திறமை. நம் நாட்டில் மிக ஆபத்தானது இடதுசாரி (கம்யூனிஸ்ட்) தீவிரவாத அமைப்புகளான நக்சல் மாவோயிஸ்டகள் போன்றவை தான். மன்மோகன் ஆட்சிக் காலத்தில் சராசரியாக வருடம் 993 காவல் படை வீரர்கள் இறந்தனர். ஆனால், இன்று 350 வீரர்களாகக் குறைந்துள்ளது. UNLFW தீவிரவாதிகளை மட்டும் 2015ல் 158பேரை தீர்த்து கட்டினோம். ஒரு பத்திரிக்கையாளர் கொலைக்குக் கதறும் இந்தப் பிரகாஷ் ராஜ், ஒவ்வொரு ஆண்டும் 1000 வீரர்கள் வரை இந்த இடதுசாரி தீவிரவாதிகளால் இறந்தார்களே அவர்களைப் பற்றி என்றாவது வாயை திறந்திருப்பாரா ? மக்கள் பாதுகாப்பு? 2000-களில் வெறும் 120 நிகழ்வு கூடக் கிடையாது என்று இருந்த இந்தியாவில் வருடம் 700நிகழ்வுகள் என்ற அதிகரித்தது இதே மன்மோகன் காலத்தில் தான்.
14) 2,09,032 shell நிறுவனங்கள் இழுத்து மூடியது மத்திய அரசு. 2.09 நிறுவனங்களின் கணக்குகளை முடக்கியது அரசு – காரணம்? இவர்கள் இந்தவிதம் வரி எய்ப்புச் செய்து வெளிநாடுகளுக்குக் கருப்புப் பணத்தை அனுப்பி வந்தனர். அது முழுவதும் முடக்கியது. அதான் புதிய தலைமுறை முதல் மணல் மாபியா நியூஸ் 7வரை கதறுகிறார்கள். இன்றைய தேதியில் பணம் உள்ளே வெளியே செல்லும் வழிகள் பெரும்பாலும் கண்காணிப்புக்குக் கீழ் வந்ததால் மொத்த அரசியல் கட்சியும் ஒரு பக்கத்தில் திரள்கிறார்கள் மோடி என்ற ஒற்றை மனிதனை எதிர்க்க. {ஆயுத எழுத்துப் படத்தில் வரத்து போலச் சூரியா எல்லாம் வந்து இந்த நாட்டை மாற்று அரசியல் செய்ய முடியாது. இருக்கும் சட்டத்தில் இந்த மனிதர் வந்ததே தெய்வ புண்ணியம்.}
15) தனி நபர் வருமான கணக்கு காட்டுவோர் சதவீதம் கூடியுள்ளது. 2013-ல் 4,72,67,582 வருமான வரி கணக்கு தாக்கல் என்றால் 6,26,91,961 என்ற அளவில் கூடியுள்ளது. அதன் மூலம் நாட்டின் வருமானம் 8,49,818 கோடி வருமானம் என்ற அளவு கூடியுள்ளது. இது வெறும் 3வருடத்தில் அடுத்த இரண்டு வருடத் தகவல்.
16) Foreign direct investment (FDI) வெறும் மோடி பதிவு ஏற்று மூன்று வருடங்களில் 38% அதிகரித்து 1.5 லட்சம் கோடி என்ற அளவில் இருந்து 3,90,000 கோடி என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. இதில் ஒரு வருடத்தில் மட்டும் Make in india திட்டம் மட்டும் 58,500கோடி வரை ஈர்த்துள்ளது. {உடனே எங்கள் வீட்டுக்கு வரவில்லை என்று கூறி கேலி தான் இங்கே பரவும். உற்பத்தித் துறை முன்னேற்றம் என்பது முதலீடுகள் அதனைச் சுற்று உருவாகும் வேலை வாய்ப்பைப் பொறுத்தது. இது நேற்று முதலீடு செய்து நாளைக்கே கிடைக்கும் பலன் அல்ல. இது மெல்லப் பலன் கொடுத்து 3வருடத்தில் மேல் எழும்ப மட்டுமே உணர முடியும். கேலி எவனும் பேசலாம். இன்று Mi போனில் ஆரம்பித்துச் சாம்சங் நிறுவனம் முதல் ராணுவ தடவாளங்கள் வரை உள்நாட்டு உற்பத்தி பெருகியுள்ளது. தாக்கம் மெல்ல உணர முடியும்..}
17) கனிமங்கள் உள்நாட்டில் அதிகம் சுரங்கங்களில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும். அவை தான் மூலப் பொருட்கள் – அந்த வகையில் chromite 3.73 MMT இன்று – மன்மோகன் விட்டுச் செல்லும் போது 2.83MMT (93% ஒடிசாவில் இருந்து தான் கிடைக்கிறது.), Copper 3.73 MMT இன்று – மன்மோகன் விட்டுச் செல்லும் போது 2.83MMT
18) உலோகங்கள்: அலுமினியம் , காப்பர் , லீட் , ஜிங் அனைத்தும் இயற்கையாகச் சுரங்கங்களில் கிடைத்தாலும் அவை உள்நாட்டுத் தேவைக்கு ஏற்ப உற்பத்தி மேற்கொள்ளப்படவேண்டும். அதன் படி Demand/ Supply தேவைக்கு ஏற்ப கூட்டியுள்ளது அரசு. மிக முக்கியம் காப்பர் இருப்பு 78% இருப்பது ராஜஸ்தான் , மத்திய பிரதேசத்தில் தான். உனக்குக் காப்பர் எனக்குக் கேன்சர் என்று எந்த மத்திய பிரதேஷ் மற்றும் ராஜஸ்தான் மக்களும் சொல்லவில்லை. எங்கள் காப்பர் மட்டும் உங்களுக்கா என்று கேட்கவும் இல்லை. இந்தியாவில் தனிமங்கள் , உலோகங்கள் பெரும்பாலும் கிடைக்கும் இடங்கள் ராஜஸ்தான் , ஓடிஸா , சட்டிஷ்கர் , கர்நாடகா ,மத்திய பிரதேஷ் தான் அதிகம். அந்த வகையில் தமிழகத்தில் மிக மிகக் குறைவு சுரங்கங்கள் தனிமங்கள் இருப்பு. இது இயற்கையாகவே.
19) பணவீக்கம் (money inflation) தான் முக்கியக் காரணம் உணவுப் பொருட்கள் வேலை ஏற்றம் அடைய. அதைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். ஆனால் மன்மோகன் காலத்தில் அது சராசரியாக 11% இருந்து. உச்சக் கட்டமாக 2010ல் அது 13.33% வரை சென்றது. அவர் விட்டுச் செல்லும் போது கூடப் பணவீக்கம் 10.22% இருந்தது. மோடி கடந்த 3.5 வருடத்தில் அதை 4% வரை கட்டுக்குள் வைத்துள்ளார். 2017 ஜூன் வரை கூட 2.2% என்ற அளவுக்குத் திறமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எங்கேயும் உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்துச் செயற்கையாக விலை ஏற்றம் செய்ய முடியவில்லை என்பதால் இந்த நிலை என்றும் கூறலாம். கொஞ்சம் 4 வருடம் முன் இருந்த நிலையோடு ஒப்பிடுங்கள் விளங்கும்.
20) மோடி வந்து காஷ்மீர் ஹிஸ்புல் முஜாகதீன் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த அனைவரையும் தீர்த்து கட்டினர். வருடம் வருடம் சிவனடியார்களைக் கொலை செய்த போது எவன் வாயைத் திறந்தான் இங்கே? ஆனால் ஒரு கொலைக்குக் கதறுகிறான் பிரகாஷ் ராஜ் போன்றவர்கள். (காஷ்மீரில் மட்டும் அதிகரித்துள்ளது – காரணம் நமது ராணுவம் முழுவதும் தீவிரவாதிகளை அழித்தொழிக்க வேகம் காட்டுவதால்)
21) சுற்றுலாத் துறையில் 2012ல் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், 65ஆவது இடத்தில் இருந்த இந்தியா 2017ல் 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மன்மோகன் விட்டுச் செல்லும் போது 4.3% வளர்ச்சி, அது 2013ல் 5.9%. ஆனால் 2017ல் அறிக்கை படி 16.4% என்று கூடியுள்ளது. அது அடுத்த அடுத்த மாதங்களில் முறையே 20% வரை தாண்டியுள்ளது. ஏன்? இந்தியாவிற்கு இன்று சுற்றுலா விசா பெறுவது மிக மிக எளிது. இதனால் வெளிநாட்டுப் பயணிகள் வருகை கூடுகிறது. அத்துடன் தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. (அதிகம் மக்கள் தமிழகம், கேரளா தான் வந்து கொண்டிருந்தனர். ஆனால் தொடர் போராட்டங்களால் நிலை மாறுகிறது தமிகழத்தில்.}
22) இன்று நீங்கள் passport விண்ணப்பிக்கவும், பாஸ்போர்ட் விரைந்து கிடைக்கவும் ஆவன செய்துள்ளனர். உலக அளவில் உள்ள இந்தியர்கள் மிக எளிதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரகத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. உலக இந்தியர்கள் வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியாக ஒன்றிணைக்கப் பட்டுள்ளார்கள். பெண்கள் கல்யாணம் ஆனால் பின் பெயர் மாற்றம் செய்யத் தேவை இல்லை தங்கள் தந்தை பெயரிலேயே தொடரலாம் என்று அறிவித்தனர். இன்று இந்தியர்கள் 58 நாடுகளுக்குச் செல்ல விசா தேவை இல்லை. உலகத்தில் passport index இந்தியாவின் கடவுச்சீட்டு ரேங்க் 74(henleypassport ரேங்க் 81) என்று உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் வாக்கு அந்த அந்த நாடுகளில் இருந்து செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார் நரேந்திர மோடி.
23) மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் இந்தக் காடுகளின் பரப்பளவு கடந்த 3.5வருடத்தில் Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA) என்று தனித்திட்டம் அமைத்து சுமார் 701673 என்ற அளவில் வளர்ந்து நிற்கிறது. அதாவது 10 ஆயிரம் சதுர கிலோ அளவிற்குக் காடுகள் பரப்பளவு கூடியுள்ளது. இதைக் கொஞ்சம் மன்மோகன் பத்து ஆண்டுகளில் என்ன கவனம் செலுத்தினார் என்று எடுத்துப் பார்க்கவும். அவர் விட்டுச் செல்ல 6,92,027என்ற அளவில் இருந்தது.
24) மின்சாரப் பற்றாக்குறை 3.5% என்ற அளவிற்குக் குறைந்துள்ளது. மொத்த உற்பத்தித் திறனை 22,566MW கூட்டியுள்ளனர் , Trasmission line 22,100 என்று அதிகரித்துள்ளது. இது அனைத்துமே இந்தியாவில் இதுவரை நடந்த ஆட்சிகளிலேயே மின்சாரத் துறையில் நடந்த மிக அதிகபட்ச உச்சம்.
25) இந்திய விரைவு சாலைகள் அமைப்பதில் தினமும் 30கிமீ என்ற வேகத்தை இந்திய அடைந்துள்ளது. இது மன்மோகன் காலத்தில் 18 கி.மீ என்று இருந்தது. காரணம்? அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் விரைந்து பேமென்ட் முதல் திட்ட அனுமதி வரை வேகபடுத்தியுள்ளது மோடி நிர்வாகம். மன்மோகன் விட்டுச் செல்லும் போது ஆண்டுக்கு 4260 கிமீ சாலை போடுவதும் , 3,625 திட்டங்கள் ஒப்புதலும் அடைந்து பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் மோடி அரசு 2016-17ல் மட்டும் 8,231கிமீ வேலையை முடித்து 16,034 கிமீ சாலை அமைக்கும் பணியை மணியை விரைவு படுத்தியது. மன்மோகன் இறுதி 3 ஆண்டுகளில் மொத்தம் அனுமதி கொடுக்கப்பட்டு நடைபெற்ற சாலை அமைக்கும் திட்டங்கள் 15,380 கிமீ தூரத்திற்கானது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் மோடி அரசு நிர்வாகம் 34,112 கிமீ சாலை அமைக்கும் பணிக்கு அனுமதி வழங்கி வேலைகள் விரைவு படுத்தியுள்ளனர் அதனால் தான் ஒரு நாளைக்கு 30 கிமீ சில நேரம் 41கிமீ வரை கூடச் சாலைகள் தினமும் போடும் அந்த வேகம் உச்சத்தில் உள்ளது.
நன்றி -மாரிதாஸ்
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
Leave a Reply
You must be logged in to post a comment.