சர்வதேச யோகா தினம் இன்று( ஜூன் 21) கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த யோகா நிகழ்ச்சியில், 55 ஆயிரம்பேர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 21-ம் தேதி, சர்வதேச யோகாதினமாக, 2015ம் ஆண்டுமுதல் கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, நாடு முழுவதும், 5,000 இடங்களில், சிறப்புயோகா நிகழ்ச்சிகளுக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில், பிரமாண்ட யோகா நிகழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், 55 ஆயிரம்பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், பல்வேறு விதமான ஆசனங்கள் செய்யப்பட்டன.
யோகா தினத்தை யொட்டி, பிரதமர் மோடி, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 'யோகா, உடலை சரியானமுறையில் வைத்திருப் பதற்கான பயிற்சி மட்டுமல்ல; நம் உடல்நலம் சீராக இருப்பதற்கும் உதவும். 'யோகாவை, தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக்க, மக்கள் முன்வரவேண்டும்' என, கூறிஉள்ளார்.
நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களிலும், அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 'யோகா லொகேட்டர்'என்ற பெயரில், 'மொபைல் ஆப்' ஒன்றை, ஆயுஷ் அமைச்சகம் அறிமுகம் செய்து ள்ளது. இதன் மூலம், பொது மக்கள், தங்கள் பகுதியில் நடக்கும் யோகா நிகழ்ச்சிகள் குறித்த விபரங்களை அறியமுடியும். நம் நாட்டில் மட்டுமின்றி, 150 நாடுகளில், யோகா தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.