70 ஆண்டுகளாக உங்களை ஏமாற்றியவர்களை புறக்கணிங்கள்

ஷாங்காய் நகரம் மக்கள் பெருக்கத்தினால் பிதுங்கிவழிந்தது, எங்கு பார்த்தாலும் டிராபிக் ஜாம் -ஆராய்ந்து பார்த்த சீன அரசு கண்டுபிடித்தது –

பிழைப்புக்காக பல கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வரும் மக்கள் அங்கேயே தங்கிவிடுவதால் ஏற்படும் மக்கள் நெருக்கம் என்று -அந்த நகரிலிருந்து அனைத்து ஊர்களுக்கும் அதிவிரைவு புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்தியது –

ஒருமணி நேரத்தில் 300 கி.மீ-க்கு அப்பால் உள்ளவர்கள் கூட ஷாங்காய் வந்து வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பி விட வேண்டும் -பெருமளவில் நகரத்தில் நெரிசல் குறைந்தது -இன்றைக்கு சென்னையிலும் அதே நிலைமை தான் –

காரில் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 15 கி.மீ தான் பயணிக்க முடியும் – நெரிசலில் வெந்து, நொந்து போய்விட வேண்டும் – மேலும், இந்தத் திராவிட ஆட்சியாளர்கள் சென்னை மட்டுமே மொத்த தமிழகம் என்பது போல எண்ணியிருந்ததன் விளைவு இது –

இன்று, சிங்கப்பெருமாள் கோவிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை இரண்டு புறமும் இடைவிடாமல் தொழிற்ச்சாலைகள் – இவைகளில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் தென் மாவட்ட மக்கள், சேலம், வேலூர், திருச்சி போன்ற இடங்களிலிருந்தும் பலர் இங்கு பணிபுரிகிறார்கள், _

மேலும், சென்னைக்கு தேவையான வாழை இலையிலிருந்து, பூக்கள், காய்கறிகள் போன்ற விரைவில் அழுகும் பொருட்கள் அனைத்தும் சில நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்துதான் வருகின்றன- இவற்றை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்காக படுவேகமாக வாகனங்களை இயக்கி விபத்தில் சிக்கும் கொடுமைகளும் நடக்கின்றன –

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டமெல்லாம் போதவே போதாது -சென்னையிலிருந்து அனைத்து பெரிய நகரங்களுக்கும் இது போன்ற திட்டங்கள் தேவை –

மேலும், மணிக்கு 300 கி.மீட்டருக்கு மேல் செல்லும் புல்லட் ட்ரெயின் திட்டங்களையும் செயல் படுத்தினால், தலைநகர நெரிசல் குறைவதுடன் –
மற்ற நகரங்களிலும் புதிய தொழிற்சாலைகளை அமைக்க தொழில் முனைவோர் முன்வருவார்கள் –

மதுரையில் இருந்து காலை நான்கு மணிக்கு மல்லிகைப்பூ இட்லியுடன் கெட்டிச்சட்னி சிங்கப்பூருக்குப் பறக்கிறது என்பது எத்துனை பேருக்குத் தெரியும்?-

இன்றைக்கு தமிழகத்தில் மாதம் முப்போகம் விளையும் ஒரே மாவட்டம் தேனி மாவட்டம் -வைகை நதியால் அல்ல – பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு(அந்த பெரியார் பெயர் அல்ல) அனையால் –

அதே போல் நூறு வருடங்களுக்கு முன்பே, தேனியிலிருந்து மலைப்பாதை வழியாக மூணாருக்கு இரயில் தண்டவாளம் போடப்பட்டிருந்தது என்பது மிகவும் முக்கியம் -இன்று, தமிழகத்திலேயே இருப்புப் பாதை இல்லாத ஒரே மாவட்டம் தேனி – இது தான், 70 வருட , காங்கிரஸ், திராவிட ஆட்சியாளர்களின் சாதனை –

நூறு வருடங்களுக்கு முன் வெள்ளையன் அமைத்த இருப்புப் பாதைகளையே இப்பொழுதுதான் நாம் இரட்டை வழிப் பாதைகளாக மாற்றி வருகிறோம் –

என்னைப் பொருத்தவரையில் நம் நாடு வளர வேண்டும் -அதற்கு உள் கட்டமைப்பு வசதிகள் பெருக வேண்டும் – அதன் மூலம், தொழிற்சாலைகள் பெருக வேண்டும் –
மக்கள், விரைவாகவும், பாதுகாப்பாகவும் நினைத்த ஊர்களுக்குச் சென்று வர வேண்டும் –

ஜாக்குவார், BMW, Benz போன்ற அதிவிரைவு சொகுசு வாகனங்களில் செல்லும் பணக்காரர்களுக்கு இனையாக -அரசுப் பேருந்துகளில் செல்லும் எங்கள் அப்பத்தாக்களும் விரைவாக பயணிக்க வேண்டும் –

மேலும், தமிழக அரசு தனியாருடன் கூட்டுச் சேர்த்து -சென்னையிலிருந்து கோவை, திருச்சி, தஞ்சை, சேலம், பாண்டிச்சேரி, கடலூர், மதுரை போன்ற நகரங்களுக்கு புல்லட் ரயில் சேவையைத் துவங்கவேண்டும் –

GST வந்ததிற்குப் பிறகு மாநில எல்லைகளில் இருந்த சுங்கச்சாவடிகளைத் தூக்கியதால் -சரக்கு வாகனங்களின் பயண நேரம் பாதியாகக் குறைந்திருக்கிறது –
உதாரணமாக முன்பு காஷ்மீரிலிருந்து ஆப்பிள் ஏற்றிய லாரி வந்துசேர ஒரு மாதமாகும்- இன்று 15 நாட்களில் வருகிறது -இதனால் 15 நாட்களுக்கான மக்கள் உழைப்பும், டீசல் செலவும் மிச்சப்படுவது கண்கூடு –

இதே போன்று சாலை வசதிகள் பெருகினால்தான் இன்னும் விரைவாக பொருட்கள் வந்து சேரும் – மேலும், வாகனங்களின் தேய்மானமும் எரிபொருள் தேவையும் பெரிதும் குறையும் –

எட்டு வழிச்சாலையை எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் சுடாலின் அவர்கள் –
இன்று வரை பெருமையாகப் பீத்திக் கொள்வது நான் மேயராக இருந்த பொழுது சென்னையில் பத்து மேம்பாலங்கள் கட்டினேன் என்பது –

சீமான், போன்ற ஐந்தறிவு ஜீவன்கள் அப்பத்தாவின் கடலை முட்டாய்க்கு வரியா என்று மீம்ஸ்களை படித்துவிட்டு பொது மேடைகளில் உளரும் முட்டாள்கள் கூட வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கிறார்கள் –

நான், தமிழக மக்களிடம் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – 70 ஆண்டுகளாக உங்களை ஏமாற்றிய கட்சிகளையெல்லாம் புறக்கணித்து -மூன்று முறை முதல்வராக இருந்தும் ஒரு ஊழல் குற்றச் சாட்டு இல்லாத -நான்கு வருடங்கள் பிரதமராக இருந்து தன் மீதும் தன் அமைச்சரவை சகாக்களின் மீதும் கூட -ஒரே , ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாத ' -இந்த நாட்டின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு _ திட்டங்களை செயல்படுத்தி வரும் – திரு. நரேந்திர தாமோதரதாஸ் மோடியைப் பற்றிக் கொள்ளுங்கள் –

பாரதம் உலகின் உண்ணத தேசமாகும் –

என்றும் தேசப்பணியில் –
ந.முத்துராமலிங்கம் –

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்