நிலச்சரிவைக் குறித்து முன்கூட்டியே கேரளாவுக்கு பலமுறை எச்சரிக்கை விடப்பட்டது – அமித் ஷா

புதுடில்லி, ”கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஏழு நாட்களுக்கு முன்னரே கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில், குறுகியகால கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, கேரளநிலச்சரிவு குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒரு வாரத்திற்கு முன்னரே கேரள அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. கடந்த ஜூலை 23ம் தேதியன்று அது தொடர்பான முதல் எச்சரிக்கை விடப்பட்டது. அன்றைய தினமே, தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒன்பது குழுக்கள், விமானம் வாயிலாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து, ஜூலை 24, 25 மற்றும் 26ம் தேதிகளிலும் கனமழை மற்றும் நிலச்சரிவு குறித்து மீண்டும் தொடர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

ஏழு நாட்களுக்கு முன்…

அங்கு, 20 செ.மீ.,க்கு அதிகமாக மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டது. மேலும், மூன்று மீட்புக் குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது. ஆனால், மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நெறிமுறை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
தயவுசெய்து நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்; கூச்சலிடாதீர்கள். வானிலை எச்சரிக்கை அறிக்கையை தயவுசெய்து படியுங்கள்.
இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தியதால் தான் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. அம்மாநில அரசு அங்கிருந்த மக்களை வெளியேற்றவில்லை. கேரள அரசு விழிப்புடன் இருந்திருந்தால் உயிரிழப்புகளை குறைத்திருக்கலாம்.
இயற்கைப் பேரழிவுகள் குறித்து, குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னரே எச்சரிக்கை செய்யக்கூடிய நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த வகையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை பொருட்படுத்தாததே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம்.

மீட்புப் படைகள் அனுப்பி வைக்கப்பட்ட பின், கேரள அரசு என்ன செய்தது என நான் கேட்கலாமா? பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மக்கள் வசிக்கின்றனரா, இல்லையா?

அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனரா? இல்லையா? அவர்கள் ஏன் வெளியேற்றப்படவில்லை? யாராவது இதை தடுத்து நிறுத்தினரா?

வெளியேற்றப்பட்டிருந்தால் மக்கள் எப்படி இறந்தனர்? இந்த துயரமான நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, கேரள மக்களுடனும், அம்மாநில அரசுடனும் ஒரு பாறை போல நிற்கிறது.

வலியுறுத்தல்

இந்த நேரத்தில், அவர்களுக்கு தேவையான எல்லா உதவியையும் மத்திய அரசு செய்யும் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விவாதத்தின் போது, காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ்,அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சி எம்.பி.,க்கள், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...