ஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அவரதுதந்தை கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் இருவரும் ஒன்றாக கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற சுவாரசியவரலாறு குறித்து காணலாம்.

இந்திய மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், மறைந்த முன்னாள் பிரதமரும் ஆன வாஜ்பாய், 1946-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள டி.ஏ.வி. கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார்.

பின்னர் 1948-ம் ஆண்டு அதே கல்லூரியில் வாஜ்பாயும், அவரது தந்தையும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான கிருஷ்ண பிகாரி வாஜ்பாயும் சேர்ந்து ஒன்றாக சட்டம்பயின்றனர். டி.ஏ.வி. கல்லூரி விடுதியின் 104வது அறையில் இருவரும் சேர்ந்து தங்கியவாறு கல்லூரிக்கு சென்றனர். தந்தை, மகன் இருவரும் ஒன்றாக வகுப்புக்குசெல்வது இருவருக்கு உள்ளேயும் சங்கடத்தை ஏற்படுத்த, இனி ஒன்றாக வகுப்புக்கு செல்ல வேண்டாம் என இருவரும் முடிவெடுத்தனர். அதன்படி வாஜ்பாய் திங்கள் கிழமை வகுப்புக்கு சென்றால், அவரது தந்தை செவ்வாய்க்கிழமை வகுப்புக்குசெல்வார்.

தந்தை, மகன் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே கல்லூரியில் படிப்பது அப்போதைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரிய பேச்சுப் பொருளாக இருந்தது என்று டி.ஏ.வி. கல்லூரியின் முதல்வர் மனவேந்திரா ஸ்வர்ப் கூறியுள்ளார்.

மேலும் இணை-பேராசிரியர் விஜய் பிரதாப்சிங் கூறுகையில், அரசியல் அறிவியல்துறையின் தலைவர் மதன் மோகன் பாண்டேவுடன், வாஜ்பாய் மிகவும் நெருக்கமாக இருந்தார். வாய்பாய் எப்போதும் அவரை குருஜி என்றே அழைப்பார். வகுப்புகள் முடிந்தபிறகு, அவரது வீட்டிற்கு சென்று ஏராளமான சமூகபிரச்சனைகள் குறித்து அவருடன் ஆலோசனை செய்வார் என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...