தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி

அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று, ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றி வருகிறார்.

இதில் 47-ஆவது முறையாக மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் ரக்ஷா பந்தன், ஜென்மாஷ்டமிக்கான இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்தார். இந்தப்பண்டிகை பல நூற்றாண்டுகளாக சமூக நல்லிணக்கத்திற்கான பெரிய எடுத்துக்காட்டாகும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஒவ்வொரு மொழிக்கும் ஒருமகத்துவம் இருக்கிறது என்றும், தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதில் பாரதத்தில் அனைவருக்குமே பெருமிதம் இருக்கிறது என்றும் மோடி கூறினார்.

மேலும் ஆசிரியர்தினத்தை முன்னிட்டு, தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை நாம் எப்போதுமே நினைவில்கொள்ள வேண்டும் என்றும், தேசத்தின் அனைத்து ஆசிரியர்களுக்கும் வரவிருக்கும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறினார்.

கேரளாவில் இயற்கைப்பேரிடரில் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு, 125 கோடி இந்தியர்களும் உங்களோடு தோளோடு தோள் நிற்கிறார்கள் என்றும், காயமடைந்தவர்கள் விரைவாக நலம்பெற வேண்டும் என்பதே தனது வேண்டுதல் என்றும் கூறினார். மேலும் விமானப்படை, கடற்படை, தரைப்படை, எல்லையோர பாதுகாப்புப்படை, மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்புப் படை, விரைவுப்படை, தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் என அனைவரும் இந்த இயக்கத்தில் மிகப் பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

மேலும் மக்களவையில் 21 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன என்றும், தாழ்த்தப் பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் ஆணையத்திற்கு இணையாக இதர பிற்படுத்தப் பட்டோருக்கான திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.

பாரத்ரத்னா விருதுவென்ற டாக்டர். எம். விஸ்வேசரய்யாவுக்கு மரியாதைசெலுத்தும் விதமாகவும் கட்டிடக் கலையை போற்றும் விதமாகவும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி, தனது ‘மன் கி பாத்’ உரையில் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...