தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய கொண்டாட்டத்திற்கு மன்சூக் மண்டொலியாவிற்கு அழைப்பு

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு அனைத்து மக்களும் குறைந்தது ஒரு மணி நேரமாவது வெளிப்புற விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள்,  விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அழைப்பை விடுத்துள்ளார்.

“கேலேகா இந்தியா -கிலேகா இந்தியா” (இந்திய மக்கள் விளையாடும்போது – இந்தியா மலர்ச்சி அடையும்) என்ற பிரதமரின் வார்த்தைகளைக் குறிப்பிட்ட திரு மாண்டவியா,  இந்தியாவை சிறந்த விளையாட்டு தேசமாக மாற்றுவதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவு என்றார். அவரால் கற்பனை செய்யப்பட்ட உடல் திறன் இந்தியா (ஃபிட் இந்தியா) இயக்கம், ஒவ்வொரு குடிமகனுக்குமான ஒரு திட்டமாகும் என்று அமைச்சர் கூறினார். மேலும் இந்த ஆண்டு தேசிய விளையாட்டு தினத்தில் நாடு தழுவிய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் அனைவரும் இருக்க அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் ஃபிட் இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், தங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் சுறுசுறுப்பாக இருப்பதும் ஒவ்வொரு  இந்தியரின் பொறுப்பு என்பதை வலியுறுத்தினார். எந்த விளையாட்டாக இருந்தாலும் விளையாடுங்கள், உடல்திறனுடன் இருங்கள்!” என்று கூறியுள்ஏ அமைச்சர், அனைவரையும் இந்த முன்முயற்சியில் சேர ஊக்குவித்தார்.

தேசிய விளையாட்டு தினம் நமது விளையாட்டு நாயகர்களை கௌரவிப்பதற்கான ஒரு வாய்ப்பு  மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்க விளையாட்டு எவ்வாறு உதவும் என்பதை நினைவூட்டுவதும் ஆகும் என்று திரு மாண்டவியா எடுத்துரைத்தார். தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்றும்,  சுறுசுறுப்பான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்னணி:

ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நமது விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.