அசாம் மாநிலத்தில், வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் குடியேற்றம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அந்தமாநிலத்தின் உண்மையான குடிமக்களை கண்டறிய தேசியகுடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் இறுதிவரைவு பதிவேடு, சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
அதில், அம்மாநிலத்தைச் சேர்ந்த 40 லட்சம்பேரின் பெயர்கள் விடுபட்டு இருக்கிறது. உண்மையான நபர்களின் பெயர்களை சேர்க்க மீண்டும்வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே, இந்தகணக்கெடுப்பு தொடங்கிய 2015-ம் ஆண்டில் இருந்து, அசாம் மாநிலத்தில் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தும், பூர்வ குடிக்கான ஆதாரம் இல்லாத ஏராளமானோர் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் கட்டுமான பணிக்கு ஆட்கள் தேவைப்படும் ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களுக்கு அதிகளவில் சென்று இருப்பதாக அத்தகவல்கள் கூறுகின்றன.
இதை கருத்தில் கொண்டு, அசாமைப் போல், எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேசியகுடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நடத்துவது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
இதுபற்றி அந்த அமைச்சக உயர் வட்டாரங்கள் கூறுகையில், “இத்தகைய கணக்கெடுப்பு நடத்துவதில் சிரமம் இருக்காது. இருப்பினும், இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தன.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.