நாட்டின் வளர்ச்சியில் அசாம் பங்கு மகத்தானது – பிரதமர் மோடி

“நம் நாட்டின் வெற்றி சரித்திரத்தில் அசாம் முக்கிய பங்காற்றி உள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில், ‘அட்வான்டேஜ் அசாம் 2.0’ என்ற முதலீட்டு மற்றும் உட்கட்டமைப்பு மாநாட்டை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

உலகளாவிய ஸ்திரத்தன்மை இல்லாத நிலையிலும், இந்தியா வேகமாக வளர்கிறது என்பதை நிபுணர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றனர்.

இந்த நுாற்றாண்டின் அடுத்த 25 ஆண்டுகளை இலக்காக வைத்து, நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம். நம் இளைஞர்கள் புதுமைகளை படைப்பவர்களாகவும், திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். அவர்கள் மேல் இந்த உலகமே அதிக நம்பிக்கை வைத்துள்ளது.

நம் உள்ளூர் வினியோகத் தொடரை வலுப்படுத்தி பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்த ஒப்பந்தம் போட்டு வருகிறோம். கிழக்கு ஆசியாவுடனான நம் வலுவான தொடர்பும், புதிதாகத் திறக்கப்பட்ட, இந்தியா- – மத்திய கிழக்கு – -ஐரோப்பா பொருளாதார வழித்தடமும் புதிய வாய்ப்புகளை அளிக்கின்றன.

நம் நாட்டின் வளர்ச்சியில் அசாமின் பங்கு அதிகரித்து வருகிறது. தற்போது, 6 லட்சம் கோடி ரூபாய் வரை பொருளாதாரத்தை உயர்த்தி உள்ளது.

கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சிறந்த முதலீட்டுக்கான சூழலில் அசாம் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த 2009 – 14 வரை, அசாம் ரயில்வே பட்ஜெட் ஆண்டுக்கு சராசரியாக, 2,100 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அது 10,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின், 60 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. குவஹாத்தி – ஜல்பாய்குரி இடையே முதன்முறையாக மிதமான விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவின்போது, அசாம் அரசு சார்பில் மாநிலத்தின் பாரம்பரிய உடையும், அங்குள்ள காமாக்யா கோவிலின் மாதிரி வடிவிலான நினைவுப் பரிசையும், பிரதமர் மோடிக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அளித்தார்.

அசாம் மாநில அரசின் விலங்காக திகழும் ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தின் தோற்றத்துடன், செமிகண்டக்டர் சிப்களில் உருவாக்கப்பட்ட சிலையையும் பிரதமர் மோடிக்கு அவர் வழங்கினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.