வரும் லோக் சபா தேர்தலை, யாராலும் வெல்ல முடியாத இந்தியா — உறுதியான பா.ஜ.க , என்ற கோஷத்துடன் எதிர்கொள்வோம். யாராலும் வெல்லமுடியாத இந்தியாவை, மிகவும் உறுதியான கொள்கையுடைய, பா.ஜ.க,வின் மூலம் உருவாக்குவோம்.
கடந்த, 31 ஆண்டுகளில், நாம் பதவிக்காக அலையவில்லை. மக்களுக்கு சேவ செய்யவே, ஆட்சி அதிகாரத்தை பயன் படுத்தி வந்துள்ளோம்; இதை, இந்த நாடு நன்கறியும்.அடுத்த, நான்கு ஆண்டுகளில், புதியஇந்தியாவை உருவாக்குவதில் உறுதியுடன் உள்ளோம். வறுமையில்லாத, பயங்கரவாதம் இல்லாத, ஊழல் இல்லாத, மதவாதம் இல்லாத இந்தி யாவை, 2022க்குள் உருவாக்குவோம்.
ஆட்சியில் இருந்த போது தோல்வியடைந்த கட்சி, தற்போது எதிர்க் கட்சியாகவும் தோல்விஅடைந்துள்ளது. நம் அரசின் பணிகள், சாதனைகள் குறித்து பேசமுடியாது என்பதால், பொய்யான தகவல்களை முன்வைத்து, எதிர்க் கட்சிகள் போராட்டங்களை நடத்துகின்றன. நாட்டில், 48 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் செய்த பணிகளை, 48 மாதங்களில் நாம் செய்தபணிகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், யார் உண்மையில் மக்களுக்காக உழைத்துள்ளனர் என்பது தெரியவரும். சரியான, நிலையான தலைமை இல்லாத, எந்த ஒருகொள்கையும் இல்லாத, தவறான நோக்கத்துடன் கூடியதாக எதிர்க் கட்சிகளின் கூட்டணி உள்ளது. நம் வளர்ச்சியை தாங்க முடியாமல், நம்மை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், அவர்கள் தற்போதைக்கு இணைந்துள்ளனர்.
பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.