டீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் விற்பனை செய்ய முடியும்

சத்தீஷ்காரில் விவசாயத் துறை வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. நெல், கோதுமை, சிறு தானியங்கள் மற்றும் கரும்பு உற்பத்தி மாநிலத்தில் மிகவும் சிறப்பாக உள்ளது, மாநிலம் பயோ எரி பொருள் உற்பத்தியில் முக்கிய மையமாக ஆகமுடியும். மாநிலத்தின் ஜாத்ரோபாவில் உள்ள பயோர் எரி பொருள் உற்பத்தி மையத்தால், விமானத்திற்கு எரிபொருள் வழங்கப் பட்டது, பயோ எரிபொருளால் இயங்கும் விமானம் தெக்ராடன்னிலிருந்து டெல்லிக்கு சென்றது. பயோ எரிபொருள் உற்பத்தியின் மையமாக மாநிலம் உருவாகினால் விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். 
 
பயோ-டெக்னாலஜி தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்கு ராஞ்சியில் மையம் ஒன்றை அமைக்கவேண்டும். எத்தனால், மெதனால், பயோ-எரிபொருள் பயன்பாட்டை தொடங்கினால் பெட்ரோலியத்தை நம்பியிருப்பது குறையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறையும். 

நெல், கோதுமை, கரும்பு உள்ளிவற்றின் கழிவுகள் தற்போது உபயோகமின்றி கொட்டப் படுகின்றன. இதனை பயன் படுத்தி பயோ எரிபொருளை நாம் தயாரிக்க முடியும்.

கச்சா எண்ணெய்க்கு மாற்றாக எத்தனால், மெத்தனால் மற்றும் எரிவாயு பயன் பாட்டை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் விவசாயிகளுக்கு பெரியளவில் பயன் வந்துசேரும். பெட்ரோல், டீசலுக்காக நாம் 8 லட்சம் கோடி செலவு செய்கிறோம். இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவடைகிறது.

பெட்ரோலிய அமைச்சகம் 5 எத்தனால் ஆலைகளை அமைத்துவருகிறது. இதன் மூலம் நெல், கோதுமை, கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்படும். இது சாத்திய மானால் இந்தியாவில் டீசல்விலை லிட்டருக்கு ரூ.50க்கும், பெட்ரோல் விலை ரூ.55க்கும் விற்பனை செய்யமுடியும்.

இது போலவே பொதுப் போக்குவரத்து வாகனங்களான பேருந்து, ஆட்டோ, வாடகைகார், போன்றவற்றுக்கு எத்தனால், பயோ எரி பொருள் கட்டாயம் ஆக்கப்படும். இதுகுறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது''.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியது:

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...