மதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த சிக்கலும் இல்லை தாமதம்  ஏன்? தமிழக  பாஜக மாநில தலைவர் Dr.தமிழிசை சௌந்தராஜன் விளக்கம்.

           சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த ஏழுபது ஆண்டுகள் பெரும்பாலும் காங்கிரஸ்  ஆட்சி செய்த காலங்கள் சேர்த்து இந்தியா  முழுவதும்  9  இடங்களில் மட்டுமே  எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில்  பிரதமர் மோடி அவர்களின் அரசு புதிதாக பதினான்கு இடங்களில் எய்ம்ஸ்  மாதிரி மருத்துவமனைகள் உயர்சிகிச்சைக்கு நாடு முழுவதும் அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருவதனால் அதில் ஏற்கனவே புதிதாக பத்து இடங்களில் திட்டம் செயலுக்கு வந்து மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மீதமுள்ள இடங்களில் புதிதாக அமைக்க பெரும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

       மதுரை  தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனை அமைய  மத்திய மாநில அரசுகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றன. மாநில அரசின் சுகாதாரத்துறை பிற துறைகளுடன்  இணைந்து சுற்றுச்சுழல் வருவாய்த்துறை ,நெடுஞசாலைத்துறை, போக்குவரத்துத்துறை இவற்றுடன் விரிவான திட்ட அறிக்கைகள் அரசு நிர்வாக நடைமுறைப்படி படிப்படியாக பெற்று கோப்புகள் தயாரிக்கப்பட்டு விரைவுப்பணிகள் நடைபெற்று  வருகின்றது. மதுரை  தோப்பூரில் அடையாளங்காணப்பட்ட இடத்தின் நடுவே பெட்ரோலிய துறையின் பெட்ரோல் குழாய்கள்  மாற்றியமைக்க ஏற்பாட்டுக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது.

      சுமார் 1500 கோடிக்கான மிகப்பெரிய திட்டம் என்பதால் இவை அனைத்தும் அரசு முறைப்படியும் வடிவைமைக்கப்படும் முறையாக தயார் செய்யது மத்திய, மாநில  அரசுகள் இணைந்து சுமூகமாக செயலாற்றி வருகிறார்கள். இதன் நிறைவு வடிவமே மத்திய அமைச்சரவை கூடி நிதி ஒதுக்கி இறுதியில் அதற்கான ஆணைகள் வரும் என்பது உறுதி. அதுவரை ஆகும் கால அவகாசம் இயற்கையானதுதான். தாமதம் என்பது  கருவுற்ற தாய் குழந்தை பிறக்க 10 மாதம் காத்திருக்க வேண்டுமல்லவா அதுபோலத்தான் இந்த கால அவகாசம்.

     சமீபத்தில் நடந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கூட நம் பாரத பிரதமர்   முன்னிலையில் மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனை அமைய உள்ளதற்கு நான் நன்றி தெரிவித்து உரையாற்றினேன்.

       தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட சகோதரர் கூட இந்த அறிவுப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது  என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் அதன்பிறகு ஏன்  ஓப்புதல் ஆணை  இல்லை என்று கேட்டிருக்கிறார். கட்டிட ஒப்பந்தம்  யாருக்கு வழங்க பட்டிருக்கிறது?  கருவுற்ற பின்புதான் குழந்தை  பிறக்க 10 மாதம் இயல்பான கால அவகாசம்  தேவை அதுபோலத்தான் இதுவும்.ஆனால் கருவுற்றபின் 3 மாதத்திலேயே குழந்தை ஏன் பிறக்கவில்லை   என்று கேள்வி எழுப்புவது எப்படி சாத்யமில்லையோ அதுபோலத்தான் நிதி ஒதுக்கவில்லை என்பதும் என்னை பொறுத்தவரை தமிழக பாஜக சார்பில் எங்களது முயற்சிக்கு தொடர்ந்து முயற்சி செய்வது மட்டுமல்லாமல் தொடர்ந்து அதற்கான வழிமுறைகளையும் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து கண்காணித்தும்,பின்பற்றியும் வருகிறது என்பதை தெரிவித்துகொள்கிறேன்.

மதுரையில் எய்ம்ஸ் அமைவது  உறுதி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...