மோடி அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பு மிக்க சாதனை செய்துள்ளது

திருச்சி தூயவளனார் கல்லூரியின் 175-வது ஆண்டு விழா மற்றும் திருச்சி என்.ஐ.டி.யில் உற்பத்தி மையம் திறப்புவிழா இன்று நடைபெற்றது.


இதில் பங்கேற்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காலை திருச்சிவந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சியில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இங்குவந்துள்ளேன். திருச்சி தேசிய தொழில் நுட்ப வளாகத்தில் (என்.ஐ.டி.) இந்தியாவிலேயே முதன்முறையாக ரூ.190 கோடியில் உயர் ஆய்வுமையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரேவளாகத்தில் 13 ஆய்வக கூடங்கள் அமைக்கப் பட்டுள்ளது சிறப்பாகும். இது என்ஜினீயரிங் கல்வி மேம்பாட்டுக்காக மட்டுமல்லாது, தொழிற்சாலை திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கும்.
 

இதைத்தொடர்ந்து திருச்சி ஜோசப் கல்லூரி 150-வது ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறேன். மத்திய நரேந்திரமோடி அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பு மிக்க சாதனை செய்துள்ளது. இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைவிட, மோடி ஆட்சியில் 2 மடங்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 

பொது மக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கியாஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் முன்பு இருந்ததைவிட கடந்த 4 ஆண்டுகளில் 2 மடங்கு கூடுதலாக நிறைவேற்றப் பட்டுள்ளது.

தற்போது பெட்ரோல்- டீசல் விலை ரூ.5 வரை குறைக்கப்பட்டுள்ளது பொது மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஒருலிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைத்துள்ளது. பாஜக ஆளும் 13 மாநிலங்களில் அந்தமாநில அரசுகளும் லிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைத்துள்ளது. இதன் மூலம் ரூ.5 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு சிறப்புவாய்ந்த சாதனைகளை செய்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...