வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப மோடி அரசு புதிய கல்விக்கொள்கை -அமித் ஷா

வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப மோடி அரசு, புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் அமித்ஷா பேசியதாவது: நான் இன்று இந்தூருக்கு வந்திருக்கிறேன். இந்தூர் அதன் தூய்மை, சுவை மற்றும் நல்ல நிர்வாகத்திற்கு பெயர் பெற்றது. இன்று முதல் இந்தூர் பசுமை நகரம் என்று அழைக்கப்படும். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, நமது இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு.

புதிய கல்விக் கொள்கை

வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப மோடி அரசு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. மாணவர்களை நமது பண்டைய கலாசாரத்துடன் இணைக்கும். புதிய கல்விக் கொள்கை நாட்டிலேயே முதன்முறையாக மத்தியப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முக்கியமான நடவடிக்கைக்காக, மத்தியப் பிரதேச அரசை நான் வாழ்த்த விரும்புகிறேன். இந்த மாநிலத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான பாடத்திட்டம் ஹிந்தியில் அமல்படுத்தப்பட்டது.

பொருளாதார தலைநகரம்

மும்பையை நாட்டின் பொருளாதார தலைநகரம் என்று அழைக்கிறோம். அதே போல் இந்தூர் மத்திய பிரதேசத்தின் பொருளாதார தலைநகரம். கல்வி மையமாக இந்தூர் வேகமாக முன்னேறி வருவது மகிழ்ச்சியான விஷயம். மத்தியப்பிரதேச மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...