ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதால், அவர்கள் தேசிய அரசியலில் பிரிவினையை ஏற்படுத்து கின்றனர் என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: அனைத்து குடிமக்களுக்கு அடிப்படைகட்டமைப்பு ஏற்படுத்தவும், நவீன உள்கட்டமைப்பை உருவாக்கவும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு முயற்சிசெய்து வருகிறது. கேரளாவில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சம்கோடி செலவு செய்துள்ளது. கேரளாவில் ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு வீடு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கசெய்ய மத்திய அரசு உழைத்து வருகிறது.
ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதால், அவர்கள் தேசிய அரசியலில் பிரிவினையை ஏற்படுத்தி கிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை காப்பாற்ற சில குழுக்கள் முன்வந்து ஒருபிரிவாக செயல்படுகின்றன.
நாட்டில், பா.ஜ., ஆளும் பமாநிலங்களில் வளர்ச்சி பணிகள் வேகமாக நடந்துவருகிறது. இதற்கு, மத்திய மற்றும் மாநிலத்தில் இணைந்து செயல்படும் இரட்டை என்ஜீன் அரசுகளே காரணம். இதேபோன்ற அரசு கேரளாவில் அமைந்தால், மாநிலம் வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |