சபரிமலை பக்தர்களை கைது செய்யும் கேரள இடசதுசாரி கூட்டணி அரசை கண்டித்து காசர்கோடு முதல் சபரிமலைவரை ரத யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது.
சபரிமலையில் போராட்டம் நடத்திய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இது வரை கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும், 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்து கேரள அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கேரளாவில் போராட்டம் நடத்திவரும் பாஜகவினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தலைவர் அமித்ஷா நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
கண்ணூரில் பாஜக புதிய அலுவலகத்தை திறந்துவைத்தார். இதைதொடர்ந்து திருவனந்தபுரம் சென்ற அவர் பல்வேறு நிகழச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறியதாவது:
‘‘கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசும், முதல்வர் பினராயிவிஜயனும் சபரிலை விவகாரத்தில் பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைகின்றனர். மதநம்பிக்கைக்கு எதிராக செயல்படும் அவர்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். சபரிமலை விவகாரம் தொடர்பாக இதுவரை 4 ஆயிரம்பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள அரசின் கொடூர மனப்போக்கையே இதுகாட்டுகிறது. பக்தர்களுக்கு ஆதரவாக பாஜக தொடர்ந்து போராட்டம் நடத்தும். மாவட்ட தலைநகரங்களில் அக்டோபர் 30-ம் தேதி உண்ணா விரதப்போராட்டம் நடைபெறுகிறது. காசர்கோடு முதல் சபரிமலை வரை பாஜக சார்பில் ரதயாத்திரை நடத்த முடிவு செய்துள்ளோம்’’ எனக் கூறினார்.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.