மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி.
மார்த்தாண்டம் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த மார்த்தாண்டம் மேம்பாலம் ஏறக்குறைய 75 சதமான பணிகள் முடிக்கப்பெற்று பொது மக்கள் பார்வைக்காக நேற்றைய தினம் (10/11/2018) மாலை 4 மணி முதல் 7 மணி வரை திறந்து விடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நாம் எந்தளவுக்கு மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தோமோ அதைவிட பல மடங்கு, பல்வேறு நோக்கர்கள் சொல்லக் கூடிய கருத்தின் அடிப்படையில் 2 லட்சம் என்கிறார்கள், ஒன்றரைலட்சம் என்கிறார்கள், லட்சத்திற்கு குறைந்து யாரும் சொல்லவில்லை.
ஆகவே லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நம்முடைய கனவு நனவானதை பார்வையிட வந்தமைக்காக உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சி மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு குடும்ப விழாவாக அமைந்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
எந்தவிதமான லாப நோக்கங்களும் இல்லாமல், ஒட்டுமொத்த மார்த்தாண்டம் பகுதி மக்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுடைய போக்குவரத்து வசதிக்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது என்பதை முழுமையாக புரிந்துகொண்டு நீங்கள் ஒத்துழைப்பு தந்தீர்கள். அதற்காக மீண்டும் மீண்டும் உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.
– பொன். இராதாகிருஷ்ணன்
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.