திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி, பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
பிறகு புயலால் பாதிக்கப் பட்டு அங்குள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தங்க வைக்கப்பட்டு இருந்த பொது மக்களை சந்தித்து ஆறுதல்கூறினார்.
இதையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜாபுயலால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை விவசாய நிலங்கள் குறிப்பாக தென்னை மரங்கள் மொத்தமாக சாய்ந்துள்ளது.
நெற் பயிர்களும் பாதிக்கப் பட்டுள்ளன. குடிசை வீடுகளும் சேதமாகி உள்ளது. சேதமான வீடுகளை சீரமைக்கும்வரை இந்தமக்களை நிவாரண முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யவேண்டும். குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்.
கஜாபுயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.