அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பியூனஸ் அயர்ஸ்க்கு வந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ், சவுதிபட்டத்து இளவரசர் முகம்மதுபின் சல்மான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப்பேசிய மோடி, ‘அமைதிக்காக யோகா’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்சியில் ஏராளமான இந்தியர்களும், அர்ஜென்டினா நாட்டவர்களும் பங்கேற்று யோகாசனத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடையே உரையாற்றிய மோடி, இந்தியாவின் பழமைவாய்ந்த சிறப்புக்குரிய யோகாசனம் கலை அர்ஜென்டினாவையும் இந்தியாவையும் இணைக்கிறது . ஒடிசா மாநிலத்தில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் முதல் வெற்றியை பெற்ற அர்ஜென்டினா அணியினருக்கு தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் கலைகள், இசை மற்றும் நடனம் ஆகியவை அர்ஜென்டினா நாட்டு மக்களை ஈர்த்துள்ளது போல், உங்கள் நாட்டு கால்பந்தாட்ட வீரர்களுக்கு இந்தியாவில் லட்சக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, மாரடோனாவின் பெயர் எங்கள் நாட்டில் மிகவும்பிரபலம். ஆரோக்கியம், நலம் மற்றும் அமைதிக்காக இந்தியா இந்த உலகத்துக்கு அளித்தபரிசு யோகாசனம். இந்தியாவுக்கும் அர்ஜென்டினாவுக்கு இடையிலான மிக நீண்ட தூரத்தை யோகா கலை இணைத்துள்ளது.
யோகாசனக் கலை உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உடலை வலிமைப் படுத்துவதுடன் மனதையையும் அமைதிப் படுத்துகிறது. ஒருவரின் மனதில் அமைதி இருந்தால் குடும்பம், சமூகம், நாடு மற்றும் உலகத்திலும் அமைதிநிலவும். 24 மணிநேரம் பயணம்செய்து 15 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து நான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். உங்களுடைய அன்பையும், ஆர்வத்தையும் பார்க்கும்போது நான் வெளிநாட்டில் இருப்பதுபோல் தெரியவில்லை. இந்தியாவில் இருப்பதாகவே உணர்கிறேன் என்றும் மோடி குறிப்பிட்டார்.
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.