பா.ஜ.கவை வீழ்த்த என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டணி ஆரம்பிக்கும் போதே வீழக்கூடிய கூட்டணியின் கூட்டம் இன்று டெல்லியில் நடந்திருக்கிறது! ஏதோ மிகப் பெரிய மெகா கூட்டணி பா.ஜ.கவிற்கு எதிராக உருவாகிவிட்டதை போல ஓர் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவர்களால் ஓர் தோற்றத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதே உண்மை. இன்று, ஒன்று சேர்ந்திருப்பவர்கள் அனைவரும், ஏற்கனவே பா.ஜ.கவிற்கு எதிராக களத்தில் இருந்து தோற்றவர்கள் தான்.. சந்திரபாபு நாயுடுவை தவிர…..
அதுமட்டுமல்ல மம்தா, சந்திரபாபு நாயுடுவை தவிர, இவர்கள் யாவரும் தங்கள் மாநிலத்திலேயே தோல்வியை தழுவிக்கொண்டிருப்பவர்கள். இவர்கள் எப்படி வெற்றியைத் தழுவ முடியும்? அதுமட்டுமல்ல 14 கட்சிகள் வருவார்கள் என எதிர்பார்த்து 9 கட்சிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அந்தந்த மாநிலத்தில் ஒருவருக்கொருவர் தீவிரமாக எதிர்த்து அரசியல் செய்பவர்கள்.
ஸ்டாலின் சொல்கிறார், ஒத்த கருத்துடையவர்கள் சேர்கிறோம் என்று! ஆனால் கேரளாவில் காங்கிரஸ் எப்படி கம்யூனிஸ்டுகளுக்கு வாக்கு சேகரிக்க முடியும்? மேற்கு வங்கத்தில் மம்தாவிற்கு எப்படி கம்யூனிஸ்டுகள் வாக்கு சேகரிக்க முடியும்? அவர்கள் அப்படி செயல்பட அந்தந்த மாநில மக்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மாநிலங்களில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக கூட்டணியாக விளங்கும் போது மக்கள் நிச்சயம் வாக்களிக்க மாட்டர்கள்.
அதுமட்டுமல்ல, காங்கிரசும், தி.மு.கவும் ஏதோ இன்று கூட்டணி அமைத்து விட்டது போலவும், சோனியாவை சந்தித்தது மிகப்பெரிய மாற்றம் போலவும் முன் நிறுத்தியிருக்கிறார்களே, இது தமிழக மக்களை ஏமாற்றுவதற்கே. இதே கூட்டணி கடந்த 10 ஆண்டுகள் இருந்த கூட்டணி தான்.
மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த போதும் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்யாத கூட்டணி தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இவர்கள் இருவரும் கைகோர்த்து வாக்குகள் கேட்டால் இவர்கள் இரண்டு பேரும் இணைந்திருந்தும் பரிதவித்த இலங்கை தமிழர்களை காப்பாற்றாத, இலங்கைத் தமிழர் படுகொலைக்கு உடந்தையாக இருந்த கூட்டணி என்ற நினைவு தான் மக்களுக்கு வரும். அமைச்சர் இருந்தும் தமிழகத்திற்கு எதுவுமே செய்யாத கூட்டணி என்பதும் நினைவிற்கு வரும். அதனால் மக்களின் ஓட்டு வராது.
ஏதோ இந்திய அளவில் பலவீனமானவர்களை வைத்துக் கொண்டு பலமான கூட்டணி கூட்டத்தை நடத்தி விட்டதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்திலேயே கூட தி.மு.க தலைமையில் இந்த கூட்டணி வலுவிழந்து வருகிறது. திருமாவளவனும், வைகோவும் ஒருவரின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கி இந்த கூட்டணியை கேலிக்குரியாக்கியதாக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் சக்தி வாய்ந்த பிரதமராக விளங்கிக் கொண்டிருக்கும் மோடிஜிக்கு எதிராக இவர்களின் பிரதமர் வேட்பாளர் யார்? அந்த விவாதம் வந்தாலே உருவாவதற்கு முன்னால் கலைந்து விடும் இந்த கூட்டணி, இதுவே முந்தைய வரலாறு…..
இந்த கூட்டணியை பார்த்தால் தமிழகத்தில் காணாமல் போன மக்கள் நலக்கூட்டணியை ஒத்த எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத அகில பாரத கூட்டணி என்றே எதிர் கூட்டணியை சொல்ல முடியும். இது மெகா கூட்டணி அல்ல, மெகா ஊழல் கூட்டணி. மக்கள் கூட்டணியும் அல்ல. தாமரை மறுபடியும் மலர்வதற்கே உதவும் கூட்டணியாக இது அமையும்.
நன்றி Dr . தமிழிசை சௌந்தரராஜன்
பாஜக மாநில தலைவர்
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.