இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா நீக்கி விட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே \ போதிய ஆதரவு இல்லாததாலும். எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததாலும் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து மூன்று பிரதான கட்சிகள் உள்பட 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில், இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 7 பேர்கொண்ட பெஞ்ச் இந்தவழக்கை விசாரித்தது. அதன்பின் நீதிபதிகள் அனைவரும் ஒரேமாதிரியான தீர்ப்பை அளித்தனர். அதன்விவரம் வருமாறு:
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது. இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரி பால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அதிரடியாக தெரிவித்துள்ளது.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.