ஹரியானா மாநிலத்தில் நடந்த 5 மேயர் பதவிக்கான தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் அனைத்திலும் வெற்றி பெற்று நாங்கள் வலுவுடன் தான் இருக்கிறோம் மக்கள் எங்களை புறக்கணிக்கவில்லை என்ற வலுவான மெசேஜை எதிர்க்கட்சிகளுக்கு தந்துள்ளனர்.
வட இந்தியாவில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதுவும் கடுமையான போட்டிக்கு மத்தியில், குறைவான தொகுதிகள் எண்ணிக்கை வித்தியாசத்தில் மட்டுமே காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது. ஆனால் ஏதோ பாரதிய ஜனதா மக்களால் முற்றிலும் நிராகரிக்கப் பட்டதை போன்றும். ஊழல் காங்கிரஸ் அரசை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டதை போன்றும் பிம்பங்களும், பில்டகளும் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் 5 மாநகரங்களுக்கு மேயர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல்வர் மனோகர் லால் கட்டார் பா.ஜ., வேட்பாளர்களுக்காக தீவிரமாக இறுதி கட்ட பிரசாரம் செய்தார்.
இதன் பலனாக யமுனா நகரில் போட்டியிட்ட பா.ஜ.,வேட்பாளர் மதன்சிங் பிற வேட்பாளர்களை விட 40 ஆயிரம் ஓட்டுகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றுள்ளார். ரானிபட் நகரில் பா.ஜ., வேட்பாளர் அவ்நீத் 74,900 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கர்னால், ஹிசார்,ரோஹ்தக் நகரில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிபெற்றனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் நேரடியாக கட்சியின் சின்னத்தை பயன்படுத்தாமல். சுயேச்சைகளின் வடிவத்தில் போட்டியிட்டனர்.. காங்கிரசின் இந்த நரித்தனத்தை முறியடித்து பா.ஜ.,வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பாஜகவின் இந்த வெற்றி மோடி அலை ஓய்ந்து விடவில்லை, பாஜக வலுவாகவே உள்ளது என்கிற வலுவான தகவலைதந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.