‘காங்கிரசை விட வஞ்சகர், நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஹரியானா சட்டசபை தேர்தலையொட்டி, சோனாபட் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் விவசாயத்துறையில் ஹரியானா முன்னணி மாநிலமாக மாறி உள்ளது. பா.ஜ., இந்தியாவை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. சட்டசபை தேர்தலில் பா.ஜ., வை அமோக வெற்றி பெற ஹரியானா மக்கள் முடிவு செய்துள்ளனர். ஊழல் விவகாரத்தை கர்நாடகா முதல்வர் சித்தராமையா எதிர்கொள்கிறார்.
காங்கிரசுக்கு ஓட்டளிப்பது என்பது ஹரியானாவின் ஸ்திரத்தன்மை, வளர்ச்சியை பணயம் வைப்பதாகும். தவறுதலாகக் கூட காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது மாநிலத்தையே அழித்துவிடும். காங்., அதன் கூட்டணி கட்சிகளுக்கு அமைதி பிடிக்காது. காஷ்மீரில் மீண்டும் 370வது சட்டப்பிரிவை கொண்டுவர விரும்புகிறார்கள். இடஒதுக்கீடு மீதான வெறுப்பு காங்கிரசின் டி.என்.ஏ.,வில் உள்ளது.
காங்கிரசை விட வஞ்சகர், நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது. இன்று எதுவாக இருந்தாலும், அதில் ஹரியானாவின் பங்களிப்பு அளப்பரியது என்று பெருமையுடன் கூறுகிறேன். ஹரியானாவில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாள் நெருங்கி வருவதால், பா.ஜ.,வுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |