மேற்கு வங்கத்தில், 3 ரத யாத்திரைகள் நடத்த பாஜகவுக்கு அனுமதி வழங்கி கொல்கத்தா உயர் நீதிமன்றம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முகத்தில் கரியை பூசி உள்ளது.
மேலும் மாநிலத்தில் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமலிருக்க கண்காணிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக ரதயாத்திரைகள் நடத்த பாஜக திட்டமிட்டு அதற்கான அனுமதியை மாநில அரசிடம் கோரியது. ஆனால், அனுமதி அளித்தால், மதக்கலவரம் உருவாகும் சூழல் ஏற்படும் என்று உளவுத்துறை கூறியதாக காரணங்களை காட்டி அனுமதி அளிக்க மேற்கு வங்க அரசு மறுத்துவிட்டது.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. அங்கு முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். அங்குள்ள 42 தொகுதிகளில் முக்கிய இடங்களில் ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டு உள்ளது இருக்கிறது.
மாநிலம் முழுவதும் 158 பொதுக் கூட்டங்களும், மூன்று பிரிவுகளாக ரத யாத்திரையைத் தொடங்கவும், 34 நாட்கள் தொடர்ந்து யாத்திரை நடத்தவும் முடிவுசெய்துள்ளது.
இதற்கான முதல்கூட்டத்தை ‘ஜனநாயகத்தைக் காப்போம் பேரணி என்ற பெயரில் கூச் பிஹார் மாவட்டம், சாகர் ஐலாந்து, தராபித் ஆகிய இடங்களில் வரும் 22, 24 மற்றும் 26-ம் தேதிகளில் ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ரத யாத்திரையை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில், ரதயாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்தவும், கூட்டங்கள் நடத்தவும் மேற்குவங்க அரசிடம் பாஜக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், ஏற்கனவே மேற்குவங்காளத்தில் செல்வாக்குப் பெற்று வரும் பாரதிய ஜனதா, இந்த ரத யாத்திரையால் மேலும் வலுப்பெறும் என்று அஞ்சிய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ரதயாத்திரை நடக்கும் இடங்களில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது, மதக்கலவரம் நடக்க வாய்ப்புள்ளது, ஆதலால், ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உளவுத்துறை கூறியதாக காரணம் காட்டி அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
இதனை எதிர்த்து மாநில பாஜக சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, அனுமதி கோரப்பட்டது. இந்த வழக்கின் இறுதிவாதம் இன்று நடந்த நிலையில், பாஜக தரப்பு வழக்கறிஞர்கள் 15 நிமிடமும், அரசு தரப்பில் 10 நிமிடங்களும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதிதபாப்ரதா சக்கரவர்த்தி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். அது பின்வருமாறு:
அதில், பாஜக ரதயாத்திரை நடத்த எந்தவிதமான தடையும் விதிக்கமுடியாது. பாஜக ரத யாத்திரை நடத்தலாம். ஆனால், எந்த மாவட்டத்தில் ரத யாத்திரை நடந்தாலும், 24 மணிநேரத்துக்கு முன்பாக, மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். குறைந்தபட்சம் ரதயாத்திரை மாவட்டத்துக்குள் நுழைவதற்கு 12 மணிநேரத்துக்கு முன்பாக தகவல்தெரிவிக்க வேண்டும்.
பாஜக நடத்தும் ரத யாத்திரை சட்டத்துக்கு உட்பட்டு, எந்தவிதமான வழக்கமான போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
ரத யாத்திரைக்குத் தேவையான அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸார் செய்துகொடுத்து, சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும்
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.