ஊழல் விவகாரத்தில் சோனியா காந்தி மவுனமாக உள்ளார் என்று பாஜக தலைவர் அத்வானி சரமாரியாகக் குற்றம் சாட்டிப் பேசினார்.
ஊழலுக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மிக சக்தி வாய்ந்த தலைவராகவுள்ள சோனியா, ஊழல் விவகாரத்தில் மௌனம் சாதிப்பது மிகவும் தவறானது என்றார் அவர்.
ஒவ்வொரு மாநிலம், மாவட்டங்கள், நகரங்கள் என மூலை முடுக்களில் எல்லாம், ஊழல் என்பது ஒரு விவாதப் பொருளாக இன்று திகழ்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா மட்டும் இந்த விஷயத்தில் வாயைத் திறப்பதில்லை. மௌனியாக இருக்கிறார் என்றார்.
ஏன் ஊழலுக்கு எதிராக ஒட்டுமொத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பிரதமரைப் பொருத்த அளவில் சொல்ல வேண்டுமென்றால், திமுக அமைச்சர்கள் தாங்கள் செய்தது பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் என்று கூறுகின்றனர். இந்த விஷயத்தில் சோனியா தனது மௌனத்தை உடைத்து வெளிவரவேண்டும் என்றார் அத்வானி.
சில நாட்களுக்கு முன்னர் உத்தர்கண்ட்டில், சோனியா கலந்து கொள்ளாத ஒரு கூட்டத்தில் அவரது பேச்சாக ஒன்றைப் படித்தனர். அதில், வெறும் பேச்சினால் மட்டும் ஊழலைக் கட்டுப்படுத்திட முடியாது என்று சோனியா கூறியிருந்தார். அது குறித்து கேள்வி எழுப்பிய அத்வானி, உண்மைதான். நானும் ஒப்புக் கொள்கிறேன். பதிலுக்கு நானும் கேட்கிறேன்… ஒரு சக்திவாய்ந்த தலைவராக உள்ள சோனியா, ஊழலுக்கு எதிராக ஏதாவது பேசவாவது செய்திருக்கிறாரா? ஊழலைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார்.
{qtube vid:=zwFRFfGZ9kA}
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.