தர்மம், ஒழுக்கம் இருக்கும் இடத்தில் வெற்றி எளிதில் வந்துசேரும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
திருச்சி சாதனா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட காரியால யத்தின் திறப்பு விழா அண்மையில் நடை பெற்றது. இந்த விழாவில், காரியாலயத்தை திறந்துவைத்தும், பாரதமாதாவின் திரு உருவப்படத்துக்கு புஷ்பாஞ்சலி செலுத்தியும் மோகன் பாகவத் பேசியது: சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி நல்ல மனிதர்களை உருவாக்கவேண்டும். எங்கு உண்மை, தர்மம், ஒழுக்கம் ஆகியன உள்ளதோ அங்கு வெற்றியும் எளிதாக கிட்டும். சுயநலம் இல்லாமல் தூய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். சாதனா காரியாலயம் சமுதாய மாற்றத்திற்கான கருவியாக அமையவேண்டும்.
உண்மை,தூய்மை,தவம் ஆகியன இருந்தால் சக்திபெருகும்.அந்த சக்தியை கொண்டு அன்புபாராட்டி மாற்றத்தை உருவாக்கிட வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக அவர், விஸ்வஸம்வாத் கேந்திரம்-தென் தமிழகம் என்ற இணையதளத்தை தொடக்கி வைத்தார். முன்னதாக விழாவுக்கு மேல்கோட்டை ஜீயர் சுவாமிகள், மன்னார்குடி ஜீயர் சுவாமிகள்,கோவை காமாட்சிபுரி ஆதீனம், ராமகிருஷ்ண தபோவனத்தின் செயலாளர் சத்யானந்த மகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சாதனா அறக்கட்டளையின் அறங்காவலர் ராஜேந்திரன்ஜி வரவேற்று பேசினார்.இவ்விழாவில் சிட்டிசன் பார் உய்யக்கொண்டான் என்ற அமைப்பின் மனோஜ் தர்மர், ரங்கராஜ் தேசிய அறக்கட்டளையின் ரவீந்தர்குமார்,ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்வயம் சேவகர் மாரிச்சாமி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். நிறைவாக சாதனா அறக்கட்டளையின் தலைவர் அரங்கவரதராஜன் நன்றி கூறினார்.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.