உங்களது நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள்மீது திணிக்காதீர் என்று பெற்றோர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.
பரிக்ஷா பே சர்ச்சா 2.0 என்ற தலைப்பில் தேர்வெழுதும் மாணவர் களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். டெல்லி தட்கோடோரா மைதானத்தில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவர்களுடன் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டைப்போல் அல்லாமல் இந்த ஆண்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாணவர்களுக்குள் போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களும் அவர்களது பெற்றோரும் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் திறன் இருக்கும். அதனைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது. அதைவிடுத்து தங்களது நிறைவேறாத ஆசைகளை எல்லாம் பெற்றோர் பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது.
பிள்ளைகளின் தேர்வு மதிப்பெண் அட்டையை பெற்றோர்கள் தங்களது பெருமையைப் பறைசாற்றும் அடையாளமாக பயன்படுத்த மாட்டார்கள் என நான் நம்புகிறேன். ஏனெனில், அதுதான் பெற்றோரின் இலக்காக இருக்குமென்றால் பிள்ளைகள் போலி பிம்பங்களாகிவிடுவர்” என்றார்.
குழந்தைகள் மீது தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கம்தொடர்பாக பெற்றோர் ஒருவர் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மோடி, “மாணவர்கள் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ளவே கூடாது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், தொழில்நுட்பம் அவர்களது மதிநுட்பத்தை விரிவாக்கம் செய்வதாக இருத்தல் வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் அவர்களுடைய புத்தாக்கச் சிந்தனைகளை வளர்க்கவேண்டும்” என்றார்.
தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் கடப்பதற்காகவே இந்தக் கலந்துரையாடல் என்பதால் தேர்வுமுடிவுகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.
“தேர்வுகள் வாழ்க்கையில் முக்கியமானதுதான். ஆனால், அதன் அழுத்தத்தை மனதில் ஏற்றாதீர். இப்போது இல்லை என்றால் எப்போதுமே இல்லை என்று அர்த்தமில்லை. இதுமட்டுமே உங்களது கொள்கையாக இருக்கவேண்டும்.
தேர்வை எழுதுவதற்கு முன்னதாக ஒரே ஒரு கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் தேர்வு உங்கள் வாழ்க்கைக்கான தேர்வா? அல்லது 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு என்ற குறிப்பிட்ட வகுப்புக்கான தேர்வா என்பதை உங்களிடம் கேளுங்கள். இதற்கானவிடை உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நேரமேலாண்மை குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். “நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய நன்னெறி நேர மேலாண்மை. நமதுநேரம் நம் கைகளில்தான் இருக்கிறது. நாம்தான் அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் முழு கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளோம். அந்தநேரத்தை வைத்து என்ன செய்யவேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். எல்லோருக்குமே 24 மணி நேரம்தான்.
ஆனால், அதைப் பயன் படுத்துபவரைப் பொறுத்து விளைவுகள் அமையும். ஒவ்வொரு நொடியையும் திட்டமிட்டு முன்னுரிமை அடிப்படையில் செலவழிக்க வேண்டும். நேரமேலாண்மை தெரிந்தவர்கள் தான் வாழ்க்கையை சுமுகமாகக் கடப்பார்கள். 10 பணிகளை நாம் முடிக்க வேண்டிய திருந்தால் அதில் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த 7 பணிகள் என்னவென்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்” என்றார்.
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.