ஜிஎஸ்டி தினக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜிஎஸ்டி, மத்திய கலால் பிரிவின் சென்னை வெளி வட்டார ஆணையரகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.
கூடுதல் ஆணையர்டி.ரஞ்சித் குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்கை முதன்மை ஆணையர் ஜே.எம்.கென்னடி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 100 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதன்மை ஆணையர் ஜி.எஸ்.டி தினத்தைக் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வருவாய் வசூல் மூலம் தேசக்கட்டமைப்புக்கு பெரும் பங்களித்து வருவதாக அவர் கூறினார். சென்னை வெளி வட்டார ஆணையரகத்தில் இயங்கும் ஜி.எஸ்.டி மையம் நாட்டிலேயே சிறந்த மையமாகத் திகழ்கிறது என்று அவர் பாராட்டினார்.
ஜி.எஸ்.டி வரிக்கான பதிவு செய்தல், கணக்குத் தாக்கல் செய்தல், பணத்தை திரும்பப் பெறுதல் ஆகியவை குறித்த விளக்கப்படம் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |