ராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றை பூசிக்கொண்டுள்ளார்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசியுள்ளதாக, மத்திய சட்டத்து றை அமைச்சர் ரவிசங்கர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:

இந்தியா – பிரான்ஸ் இடையே ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பே, இந்த ஒப்பந்தம் தனக்குக் கிடைக்கப்போகிறது என்று தொழிலதிபர் அனில் அம்பானி அறிந்திருந்தார் என்பதை மின்னஞ்சல் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கருக்குக்கூட தெரியாத சில தகவல்கள், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே அனில் அம்பானிக்குத் தெரிந்திருக்கிறது. இது அரசுப்பணிகள் தொடர்பான ரகசியம்காக்கும் சட்டத்துக்கு எதிரான செயலாகும். இதற்காகவே மோடியை சிறையில் அடைக்கலாம் என்று கூறியிருக்கும் ராகுல், மோடி ஒருவரால்மட்டுமே இந்த ஒப்பந்தம் பற்றி அம்பானியிடம் சொல்லியிருக்க முடியும்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி தாக்கல்செய்யும் அறிக்கையை நாங்கள் ஏற்கப்போவதில்லை என்றும், அது பிரதமர் மோடி எனும் காவல்காரரின் கணக்கு தணிக்கையாளர் தாக்கல்செய்யும் அறிக்கை.
இவ்வாறு ராகுல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசியுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ராகுலின்பேட்டிக்கு பதிலடி கொடுத்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடிக்கு எதிராக ரஃபேல் போர்விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு வெட்கமற்ற ஒன்றாகும். பொறுப்பற்றதனத்தின் உச்சம். ஐரோப்பிய விமானதயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்ஸின் மின்அஞ்சல் பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை ராகுல் காந்தி கையில் வைத்து பேசுகிறார்.
ஒரு நிறுவனத்தின் உள்நிர்வாகம் தொடர்பான மின்அஞ்சல் நகல் ராகுல்காந்திக்கு கிடைத்துள்ளது என்றால், வெளிநாட்டு நிறுவனங்களுடன் ராகுல்காந்தி பேரம் பேசியுள்ளது தெளிவாகத் தெரிய வருகிறது.

பிரதமர் மோடி ராஜதுரோகம் செய்துவிட்டார் என்று ராகுல் கூறியுள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இந்திராகாந்தி குடும்பத்தில் வந்த பிரதமர்களுடன் எங்கள் தலைவர்களுக்கு கூட பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் நாங்கள் ஒருபோதும் யாரையும் ராஜ துரோகம் என்று குற்றம்சாட்டியதில்லை.
இந்த குற்றச்சாட்டினால் ராகுல்காந்தி தன் முகத்தில் தானே சேற்றை பூசிக்கொண்டுள்ளார்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...