ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழகவீரர் சுப்பிர மணியன் உள்பட 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். புல்வாமா மாவட்டம், அவந்தி புராவில், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீ நகரில் உள்ள முகாமுக்கு வீரர்கள் இந்த வாகனங்களில் சென்றனர்.
மொத்தம் 70 வாகனங்கள் அணி வகுத்துச்சென்றன. அப்போது அவர்கள் சென்ற வாகனங்களை குறி வைத்து குண்டுகள் வெடித்தன. அதில் குண்டுவெடித்த வாகனத்தில் இருந்த ஏராளமான வீரர்கள் சிக்கிக் கொண்டனர். பயங்கர தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கேரளா, கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும் தாக்குதலில் கொல்லப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடுமுழுவதும் இந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்… அந்ததாக்குதலில் தமிழக வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தாக்குதலில் பலியாகி உள்ளார். சவலப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்பிரமணியனுக்கு அண்மையில் தான் திருமணம் நிகழ்ந்துள்ளது. தாக்குதல் நிகழ்ந்த அன்று மதியம் தமது குடும்பத்தினருடன் அவர் செல்போனில் பேசியிருக்கிறார். அதன் பிறகு… அவரது செல்போன் அனணத்து வைக்கப்பட்டு இருக்கிறது.
சுப்பிரமணியனுடன், மற்றொரு தமிழகவீரரும் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர்யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் வீர மரணம் அடைந்த மற்றொரு வீரர் அரியலூர் மாவட்டம் கார்க்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.