தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட விமானப் படை தாக்குதலை நேரடியாக கண்காணித்த பிரதமர் மோடி அதன் பின்னர் தனது நிகழ்ச்சிகளில் பிஸியானார். ஒருபெரிய சம்பவத்தை நடத்தி விட்ட பின்னர், மிகவும் கூலாக மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியில் இஸ்க்கான் கோயிலுக்கு சென்ற மோடி அங்கு உலகின் மிகப் பெரும் பகவத் கீதையை புரட்டிப்பார்த்தார். மொத்தம் 2.8 மீட்டர் நீளம் கொண்ட பகவத் கீதையின் எடை 800 கிலோ.
பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசினாலும், அதிகாலையில் நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதல் குறித்து ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை.
ஆனால் மறைமுகமாக இந்த தாக்குதல் குறித்து பேசிய மோடி, ‘மனிதத்தின் எதிரிகளிடம் இருந்து இந்த உலகம் காப்பாற்றப்பட வேண்டும். கடவுளின்சக்தி எப்போதும் நம்பக்கம் இருக்கிறது. இந்த செய்தி துஷ்டர்களுக்கும், அசுரர்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும்’ என்று கூறினார்.
முன்னதாக ராஜஸ்தானில் பேசிய மோடி, ‘நாடு பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது. நாட்டை விட பெரியது ஏதும் இல்லை’ என்று பேசினார்.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.