நாடுவேதனை அடையும் சமயங்களில் ராகுல் கொண்டாட்ட மனநிலைக்கு செல்வது ஏன்?

நாடுவேதனை அடையும் சமயங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கொண்டாட்ட மனநிலைக்கு செல்வது ஏன்? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் ஐ.நா. தீர்மானத்திற்கு சீனா முட்டுக் கட்டை போட்டது தொடர்பாக ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தற்கு பாஜக இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது.

முன்னதாக, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை கண்டு பிரதமர் மோடி அச்சம் கொண்டுள்ளதாகவும், சீனா இந்தியாவுக்கு எதிராக செயல்படும் போது ஒரு வார்த்தைக்கூட பேசுவதில்லை என்றும் ராகுல்காந்தி கூறியிருந்தார்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களைச் சந்தித்து,  ராகுலின் விமர்சனத்துக்கு பதிலடிகொடுத்தார். அவர் கூறியதாவது:
சீனாவின் நடத்தைகளால் இந்தியாவின் நிலைப்பாடு தோல்வி அடைந்துள்ள சமயத்தில் ராகுல்காந்தி மட்டும் கொண்டாட்ட மனநிலையில் இருப்பது ஏன்?

சுட்டுரையில் நீங்கள் தெரிவித்தகருத்தை ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தின் அலுவலகத்தில் உற்சாகத்துடன் பார்த்திருப்பார்கள். பயங்கரவாதத்துக்கு எதிரானபோரில், இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுதான் என்ன? மிகுந்தவலியோடு இதைக் கேட்க விரும்புகிறோம்.

ராகுல்காந்தியின் சுட்டுரைப் பதிவு பாகிஸ்தானில் தலைப்புச் செய்தியாக இருந்திருக்கும். பாகிஸ்தானில் செய்திவெளியாவது கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடையளாம்.

உங்கள் கருத்துப்படி சீனாவுடன் நீங்கள் நெருங்கிய நட்புறவில் இருப்பதாகத் தெரிகிறது. மானசரோவருக்கு புனிதப்பயணம் மேற்கொண்டபோது, சீன அதிகாரிகளுடன் நல்லுறவில் இருப்பதாகத் தெரிவித்தது நீங்கள் தான்.

ராகுலுக்கு சீனாவுடன் நல்லுறவு இருக்குமெனில், அதன் மூலமாக நாடு ஏன் பலன் அடையக்கூடாது? மசூத் அசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சீனாவை ஏன் அவர் வலியுறுத்தக்கூடாது?
ராகுலுக்கு அறிவுரைதேவை: வெளியுறவுக் கொள்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். அதை சுட்டுரையில் விவரித்துவிட முடியாது. காங்கிரஸ்கட்சி நாட்டை 55 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது. ஆகவே, வெளியுறவுக் கொள்கை என்றால் என்னவென்று மிகச்சரியான அறிவுரையை ராகுல் காந்திக்கு அக்கட்சி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுவாக, வெளியுறவுக் கொள்கையை பொருத்தமட்டில், அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே ஓர் எல்லைஉண்டு என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...