பாஜக.,வின் தேர்தல்அறிக்கை சங்கல்ப பத்ர – உறுதிமொழிப் பத்திரம் என்ற பெயரில் வெளியானது.
தேர்தல் அறிக்கையை தில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப்பேசிய பாஜக.,தலைவர் அமித்ஷா, பாஜக.,வின் தேர்தல் அறிக்கைக்கு பெயர் சங்கல்ப பத்ரா. அதாவது உறுதிமொழிப் பத்திரம். பாஜக.,வின் 5 ஆண்டு ஆட்சியில் சாதனைகள் பல படைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்காக பணியாற்றியுள்ளோம். 2014-19 காலக் கட்டம் இந்தியாவின் சரித்திரத்தில் பொற்காலம். பாஜக., ஆட்சியில், இந்தியபொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது. தேசப்பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். 50 கோடி ஏழைகளுக்காக உழைத்துள்ளோம் .
வெளிப்படையான அரசுக்கு மோடி அரசு ஓர் உதாரணம். 5 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் ஏதும் இல்லை. பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் ஏழைகளுக்கு பலதிட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
5 ஆண்டில் மிகப்பெரிய முடிவுகளை எடுத்துள்ளோம். இளைஞர்கள் விருப்பத்துக்கு ஏற்ப பணியாற்றி இருக்கிறோம். தேர்தல் அறிக்கைக்காக 6 கோடிபேரிடம் ஆலோசனை கேட்டுள்ளோம்… என்று கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை – சங்கல்ப பத்திரத்தில்…பாஜக தேர்தல் அறிக்கை தொலைநோக்கு பார்வை கொண்டது,
நடைமுறைக்கு சாத்தியமானது
பாஜக தேர்தல் அறிக்கையில் 75 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன
பாஜக தேர்தல் அறிக்கையில் 12 துணைத்தலைப்புகளில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன
வேளாண்மை, ஊரகவளர்ச்சி சார்ந்து 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதி கூறப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்துசெய்யப்படும்
உள்கட்டமைப்புத் துறையில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு உறுதி
பயங்கரவாதத்திற்கு எதிராக, துளிகூடசமரசம் இல்லை என்ற கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்
ராணுவத்திற்கு தேவையான அதிநவீன கருவிகள், தளவாடங்கள் வாங்குவது விரைவு படுத்தப்படும்!
ஜிஎஸ்டி நடைமுறை மேலும் எளிமையாக்கப்படும்
யோகாவை உலகளவில் கொண்டுசெல்ல மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்
நாட்டில் உள்ள தேசிய நெடுஞ் சாலைகளின் நீளம் 2022-க்குள் இரட்டிப்பாக்கப்படும்
60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஒய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
சபரிமலை விவகாரத்தில் மதநம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்போம்
தீவிரவாதம் வேரோடு அழிக்கப்படும்வரை, தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும்
வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் வரை குறுகியகால விவசாய கடன்
கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கு வட்டி இருக்காது
பாஜக தேர்தல் அறிக்கையின் சில முக்கிய வாக்குறுதிகளின் விவரம் பின்வருமாறு:
உள்ளிட்ட 75 வாக்குறுதிகள் இந்த 48 பக்கங்கள் கொண்ட பாஜக சங்கல்ப பத்திரத்தில் இடம்பெற்றுள்ளன.
You must be logged in to post a comment.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையும் போதனைகளை ஒவ்வொரு இந்துவிற்கும் கற்றுக் கொடுக்க வழி செய்யப்படும் என்ற திட்டம் இந்து சமூகத்திற்கு அவசியமானது