பாஜக வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு

இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அந்நாட்டுடன் அமைதி பேச்சுக்கும், ஜம்முகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணவும் வாய்ப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாதில் புதன்கிழமை வெளிநாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் குழுவைச்சந்தித்த இம்ரான்கான் கூறியதாவது:
இந்தியாவில் வலதுசாரி (பாஜக) ஆட்சி அமைந்தால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணும் விஷயத்தில் பிரச்னை ஏற்படும் என்று பிறகட்சிகள் நினைக்கலாம். ஆனால், பாஜக வெற்றிபெற்றால், இந்தியாவுடன் அமைதிப் பேச்சு நடத்தவும், ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாணவும் வாய்ப்பு அதிகம் என்றே நான் கருதுகிறேன்.

காஷ்மீர் விவகாரம்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே முக்கியப் பிரச்னையாக உள்ளது. ஜெய்ஷ்-ஏ-முகமது உள்பட அனைத்து பயங்கரவாத அமைப்புகள்மீதும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஜெய்ஷ்-ஏ-முகமது உள்பட பலபயங்கரவாத அமைப்புகள் ஆயுதங்களை எடுப்பதை முழுமையாக தடுத்து நிறுத்தியுள்ளோம். அந்த அமைப்புகள் நடத்திவந்த மதராஸாக்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்களை பாகிஸ்தான் அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டுள்ளது. இதன்மூலம் அவர்களது நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன.

பாகிஸ்தானின் எதிர் காலம் மிகவும் முக்கியமானது. எனவே, நாங்கள் பயங்கரவாத அமைப்புகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். சர்வதேச நெருக்கடிகளின் காரணமாகவே பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தது என்று கூறுவது தவறு என்றார் இம்ரான் கான்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...