திருட்டு போகும் மற்றும் காணாமல் போகும் செல்போன்களை அதிரடியாக செயலிழக்க செய்வது தொடர்பான இறுதி பரிந்துரைகளை இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) டிசம்பர் மாதத்திற்குள் வெளியிட உள்ளது.
நாட்டின் தொழில் துறை வளர்ச்சியோடு இசைந்து தொலை தொடர்பு துறையும் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. எதிர் வரும் காலங்களில் செல்போன்களின் பயன்பாடு மேலும் சிறப்பான அளவில் அதிகரிக்கும் என தெரிகிறது. அதேசமயம் செல்போன்கள் திருட்டு போவதும் அடிக்கடி நடைபெறுகிற சம்பவமாகிவிட்டது.
இது போன்ற சந்தர்ப்பங்களில், செல்போன்களில் ஒருவரால் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில், திருட்டு மற்றும் காணாமல் போகும் செல்போன்களை செயலிழக்கச் செய்ய தேவையான பரிந்துரைகளை ‘டிராய்’ விரைவில் வெளியிடும் என தெரிகிறது.
அது மட்டுமல்லாமல் அமைப்பு சாரா செல்போன் சந்தையை கட்டுக்குள் கொண்டு வருவதும் டிராயின் முக்கிய நோக்கமாக உள்ளது.செல்போன்களுக்கு, சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐ எம் இ ஐ) அதன் தயாரிப்பாளர்களால் வழங்கப்படுகிறது. இந்த எண் செல்போன் சேவை நிறுவனங்களின் பதிவேட்டில் பதிவாகி இருக்கும். இவ்வகை எண்களை கொண்டு திருடப்படுகிற அல்லது காணாமல் போகிற ஒரு செல்போனின் இருப்பிடத்தை அடையாளம் கண்டு அதனை செயலிழக்க செய்ய முடியும்.
இதன் சாத்தியக்கூறுகளை ஆய்ந்து தகவல் தருமாறு, கடந்த ஆண்டு செல்போன் தயாரிப்பாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்களை டிராய் கேட்டிருந்தது.
தற்போதைய வசதிகளை பயன்படுத்தி, காணாமல் போகும் செல்போன்களை செயலிழக்க செய்ய இயலாது. ஆனால் சிம் கார்டுகளை செயலிழக்க செய்வது சாத்தியம் என டிராய் அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.