21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும்

இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 5ஜி சோதனைக்கருவி, தொலைத் தொடர்புத் துறையில் நவீனதொழில்நுட்பம் மற்றும் தற்சார்பில் முக்கியத்துவத்தை நோக்கிய ஒருமுக்கிய நடவடிக்கை. “நாட்டின் சொந்த 5ஜி தரம், 5ஜிஐ என்றவடிவில் உருவாக்கப்பட்டுள்ளது, இதுநாட்டுக்கு பெரும்மதிப்பு அளிக்கும் விஷயமாகும். நாட்டின் கிராமங்களுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டுசெல்வதில் பெரும் பங்காற்றும்”

21-ம் நூற்றாண்டின் இந்தியாவில் வளர்ச்சியின்வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும், இதற்கு ஒவ்வொரு மட்டத்திலும் தொடர்பு நவீனமய மாக்கப்பட வேண்டும் என்றார். நாட்டின் ஆளுகை, எளிதாக வாழுதல், எளிதாக வர்த்தகம்புரிதல், ஆகியவற்றில் ஆக்கப் பூர்வமான மாற்றங்களை 5ஜி தொழில்நுட்பம் கொண்டுவரப் போகிறது. இது வேளாண்மை, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, போக்குவரத்து போன்ற ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது ஏராளமான வேலைவாய்ப்புகளையும், வசதிகளையும் அதிகரிக்கும். 5ஜி-யை வேகமாக பிரபலப்படுத்த அரசு மற்றும் தொழில் துறையின் முயற்சிகள் தேவைப்படுகிறது.

தற்சார்பு மற்றும் ஆரோக்கியமான போட்டி ஆகியவை சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் எத்தகைய பன்னோக்குப் பயனை உருவாக்கும் என்பதற்கு தொலைதொடர்புத் துறை பெரும் உதாரணம். 2-ஜி யுகத்தின் விரக்தி, ஏமாற்றம், ஊழல், கொள்கை முடக்கம் ஆகியவற்றிலிருந்து வெளிவந்து நாடு, 3ஜி, 4ஜி, தற்போது 5ஜி மற்றும் 6ஜி-யை நோக்கி வேகமாக முன்னேறிவருகிறது.

கடந்த 8 ஆண்டுகளில், அடைதல், சீர்திருத்தம், ஒழுங்குப் படுத்துதல், விடையளித்தல், புரட்சிகரப்படுத்துதல் ஆகிய பஞ்சாமிர்தத்துடன் தொலை தொடர்புத் துறையின் புதிய ஆற்றல் ஊக்குவிப் பட்டுள்ளது. சென்றவற்றை நினைப்பதை கைவிட்டு, நாடு தற்போது அரசின் அணுகு முறையுடன் முன்னேறி செல்கிறது. இன்று தொலைத்தொடர்பு மற்றும் இணையதள பயன்பாடு விஷயத்தில் உலகிலேயே மிகவேகமாக முன்னேறும் வகையில் நாட்டில் இதனை விரிவுப்படுத்தி வருகிறோம். இதில், தொலைத் தொடர்புத்துறை உட்பட பலதுறைகள் முக்கிய பங்காற்றியுள்ளது.

இன்று பரம ஏழை குடும்பங்களிலும் செல் பேசி சென்றடைந்துள்ளதை உறுதி செய்துள்ளோம் , இதற்கு செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரித்ததேகாரணம் . முன்பு இரண்டு செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தநிலையில் தற்போது இது 200-ஆக அதிகரித்துள்ளது .

இன்று நாட்டில் உள்ள ஒவ்வொருகிராமத்தையும் கண்ணாடி இழை இணைத்துள்ளது . 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு 100 கிராம ஊராட்சிகளில்கூட இந்தவசதி இருக்கவில்லை . தற்போது 1.75 லட்சம் கிராம ஊராட்சிகளில் அகண்ட அலைவரிசை இணைப்பை நாம் செய்திருக்கிறோம். இதன்பயனாக நூற்றுக்கணக்கான அரசு சேவைகள் கிராமங்களைச் சென்றடைந்து வருகிறது.

நிகழ்காலம் மற்றும் எதிர்கால சவால்களை சமாளிக்க, அரசின் முழு அணுகுமுறையும் ட்ராய் போன்ற ஒழுங்கு முறை நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியம். “இன்று ஒழுங்கு முறை என்பது ஒருதுறை எல்லைகளுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. பல்வேறு துறைகளை தொழில்நுட்பம் இணைத்துள்ளது. அதனால்தான் இன்று ஒவ்வொருவரும் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறையின் அவசியத்தை உணர்ந்துள்ளனர். இதற்கு அனைத்து ஒழுங்கு முறை நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து பொதுவான தளங்களை உருவாக்கி சிறந்த ஒருங்கிணைப்புக்கான தீர்வுகளைகண்டறிவது அவசியமாகும்.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) வெள்ளிவிழா கொண்டாட்டத்தை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...