பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று டெல்லியில் விருந்தளித்தார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தேசியதலைவர் அமித்ஷா நேற்று மாலை டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் விருந்து அளித்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் அகாலிதளம் தலைவர் பிரகாஷ்சிங் பாதல், அவரது மகன் சுக்பீர் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், அவரது மகன் சிராக் பாஸ்வான், தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அப்னா தளம் தலைவர் அனுப்ரியா படேல், இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அதவாலே, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நரேந்திர மோடி வெளியிட்ட புகைப்பட தகவலில், இதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பம் . இந்தியாவின் வேற்றுமை தன்மையை எடுத்துக் காட்டுவதைப்போல இந்த கூட்டணி அமைந்துள்ளது. பிராந்திய அளவிலான தேவைகளை பூர்த்தி செய்வதோடு தேசிய வளர்ச்சிக்கான சிறப்பான கூட்டணி எங்களுடையதுதான் என்று மோடி அதில் தெரிவித்துள்ளார்
முன்னதாக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளைசேர்ந்த மத்திய அமைச்சர்களின் கூட்டத்தை பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கூட்டினார்.
மத்திய அமைச்சர்கள் நாட்டுக்கு ஆற்றியபணிக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இக்கூட்டம் கூட்டப்பட்டது.
இந்தக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “நான் பலதேர்தல்களை பார்த்துள்ளேன். ஆனால் இந்ததேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. இந்த லோக்சபா தேர்தலுக்காக நான் மேற்கொண்ட பிரசாரம் புனிதயாத்திரை மேற்கொண்டது போல் இருந்தது.கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடன் இணைந்து பணியாற்றிய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதுபற்றி நிருபர்களிடம் மூத்த அமைச்சரான ராஜ்நாத்சிங் கூறுகையில், நரேந்திர மோடி தனது ஆட்சிக்காலத்தில், வரலாற்று சிறப்புமிக்க பல முடிவுகளை அறிவித்துள்ளார். இதற்காக அனைத்து கூட்டணிகட்சிகளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும், இந்த கூட்டத்தில் 36 கூட்டணி கட்சியினர் பங்கேற்றதோடு, மூன்று கூட்டணி கட்சியினர் தங்கள் பிரதிநிதிகளை அனுப்ப இயலவில்லை என்றும் ஆனால் பாஜகவிற்கு, தங்களது ஆதரவு என்றும் கடிதம் அனுப்பி உள்ளதாக ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
இக்கூட்டத்தை தொடர்ந்து பாஜக தலைவர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசின் கடினஉழைப்பு மற்றும் சாதனைகளுக்காக அரசில் இடம் பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |