யாரை புகழ்வது..?

ஒடிஷாவின் பாலாசோர் தொகுதியில் இருந்து முதல்முறையாக மக்களவைக்குத் தேர்வான பிரதாப் சந்திர சாரங்கிக்கு, திரு நரேந்திர மோடி அவர்கள் தனது கேபினட்டில் இடம் அளித்திருக்கிறார்.

ஒடிஷாவைச் சேர்ந்த பிரதாப் சந்திர சாரங்கி. அம்மாநிலத்தின் பாலாசோர் தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்.பி-யாகியிருக்கிறார் அந்த எளிய மனிதர். சைக்கிளில், கிராமங்களில் மக்களோடு மக்களாக வலம்வரும் அவர், தேர்தலின்போது ஆட்டோவில் சென்றுதான் பிரசாரம் செய்துள்ளார். சொந்த வீடோ அல்லது காரோ இல்லாத எளிமையான மனிதரான அவரை அணுகுவதும் எளிது என்கிறார்கள், ஒடிஷா மக்கள்.

முதல்முறையாக மக்களவைக்கு பா.ஜ.க சார்பில் வேட்பாளராகக் களமிறங்கிய பிரதாப்சந்திர சாரங்கிக்கு எதிராகக் களமிறங்கிய 2 வேட்பாளர்களும் மிகவும் பலம்பொருந்தியவர்கள். ஒருவர் பிஜுஜனதா தளம் சார்பில் களமிறங்கிய சிட்டிங் எம்.பி-யும் தொழிலதிபருமான ரபீந்திரகுமார் ஜெனா. பெரும் பணக்காரரான அவருக்கு சொந்தமாக News World Odisha என்ற செய்தித் தொலைக்காட்சியும் உண்டு. அதேபோல், அவருக்கு ஆதரவாக, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பிரசாரம் மேற்கொண்டார்.

மறுபுறம், காங்கிரஸ் வேட்பாளர் நபஜோதி பட்நாயக். ஒடிஷா மாநில காங்கிரஸ் தலைவரான நிரஞ்சன் பட்நாயக்கின் வாரிசு என்ற அடிப்படையில் மக்களிடம் பிரபலமானவர் இவர். நபஜோதியின் சித்தப்பாவான சௌமியா ரஞ்சன் பட்நாயக், ஆளும்கட்சியான பிஜுஜனதா தளத்தின் மாநிலங்களவை எம்.பி-யாகப் பதவி வகித்துவருகிறார். ஒடிஷாவின் மிகப்பெரிய செய்தி நெட்வொர்க்கான ஈஸ்டர்ன் மீடியா லிமிட்டெட் (EML) ரஞ்சன் பட்நாயக்கிற்குச் சொந்தமானது. அம்மாநிலத்தில் அதிகம் விற்பனையாகும் சம்பாத் (Sambad) மற்றும் 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சியான கனக் டிவி (Kanak TV) ஆகியவை ஈஸ்டர்ன் மீடியாவுக்குச் சொந்தமானவை.

இந்த இரண்டு வேட்பாளர்களின் அரசியல், அதிகாரம், பணபலம் ஆகியவற்றைத் தோற்கடித்து வென்றிருக்கிறார், பிரதாப்சந்திர சாரங்கி. ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இளம்வயதில் இருந்தே ஈடுபாடுகொண்ட சாரங்கி, அப்பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். சைக்கிளில் கிராமம் கிராமமாக வலம்வந்து, தொடர்ந்து மக்களைச் சந்தித்துவந்த அவர், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக பாலாசோர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நீலகிரி தொகுதியில் இருந்து இரண்டு முறை சுயேச்சை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவர்.

இப்பொழுது மக்களவைக்கு,பா.ஜ.க சார்பில் களமிறங்கிய சாரங்கி 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் கோடீஸ்வர் ஜெனாவைத் தோற்கடித்து, பலாசோர் தொகுதி எம்.பி-யாகியிருக்கிறார் சாரங்கி. தோற்கடித்தார் என்பதைவிட?அந்த தொகுதி மக்கள் செல்வந்தரின் செல்வத்துக்கு தமிழர்களாகிய நம்மை போல் விலை போகாமல் எளிமையான,நேர்மையான மனிதரை தேர்ந்தெடுக்கும் அந்த பண்பு அந்த எளிய அத்தனை மக்களுக்கும் ஒருசேர எப்படி உள்ளது?உண்மையிலேயே அந்த தொகுதி மக்கள் வசிக்கும பக்கம் நோக்கி,கை எடுத்து கும்பிட தோன்றுகிறது..

யாரை புகழ்வது?அந்த எளிய வேட்பாளரையா?அவரை தேர்ந்தெடுத்த அந்த தொகுதி மக்களையா?அவருக்கு சீட்டு கொடுத்த கட்சியையா?இந்த எளிய மனிதருக்கு போய் பிரச்சாரமும் செய்து,மந்திரி பதவியையும் கொடுத்துள்ள பிரதமரையா?

இவர்களுக்கு இந்த பண்பு எப்படி வந்தது?இந்த கட்சியி்ன் தலைவரும், பிரதமரும்,வேட்பாளரும் ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பு என்பதனால் இருக்குமோ..?

எத்தனையோ கோடிஸ்வரர்கள்,ராஜ குடும்பத்தினர்,சினிமா பிரபல்யங்கள்என பலர் மந்திரி பதவிக்கு காத்திருக்க,இந்த எளிய மனிதரை தேடி போய், அவருக்கு,மந்திரி பதவியை கொடுத்து கௌரவிக்கும் இந்த பண்பு வேறு எந்த கட்சிக்கு,வேறு எந்த தலைவனுக்கு இருக்கும்?

இவைகள் எல்லாம் தமிழ்நாட்டில் சாத்தியமா?இவைகளை தமிழர்களாகிய நம்மால் நம்பத்தான் முடிகிறதா?

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...