மத்திய அமைச்சரின் பதில் புரியவில்லையென்றால் ஆங்கிலம் படியுங்கள்

ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மத்திய அமைச்சரின் பதில் புரியவில்லையென்றால் ஆங்கிலம் படியுங்கள் என திமுக எம்.பிக்களை பாஜக கிண்டல்செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்திதொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நீரகக்கரிமம்  (ஹைட்ரோ கார்பன்) குறித்து ஸ்டாலின் அவர்களும் மற்ற எதிர்கட்சியினரும் தொடர்ந்து மக்களை தூண்டிவிட்டு பதட்டத்தை உருவாக்கி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளதாக சொல்லிகொள்ளும் தமிழகத்தில் உள்ள 37 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு, (குறிப்பாகஇந்த கேள்வியை கேட்டவர் அ.ராசா).  பெட்ரோலியதுறை அமைச்சர் அவர்கள் பாராளுமன்றத்தில் கொடுத்திருக்கும் பதிலை படித்தார்களா? படித்திருந்தால் புரிந்துகொண்டார்களா? புரிந்து கொண்டிருந்தால், இவர்கள் மக்களை தூண்டி விடுவதற்காகதான் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. புரிந்து கொள்ளவில்லையென்றால் ஆங்கிலம் கற்கவேண்டியது அவசியமாகிறது.

அமைச்சர் அளித்த பதிலில் கீழ்கண்ட தகவல்கள் மிகத்தெளிவாக கூறப்பட்டுள்ளன.

தமிழத்தில் 23 இடங்களும், குஜராத்தில் 232 இடங்களும், மற்ற பிறமாநிலங்களில் எவ்வளவு இடங்கள் என்பதையும்  குறிப்பிடப்பட்டிருப்பதை தெளிவாக காணலாம். ஏதோ தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்ததிட்டம் வருவது போன்ற ஒருமாயையை எதிர்க்கட்சியினர் உருவாக்கியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.

கிணறுகளை துளையிடுவதற்கு முன்னர், மத்திய சுற்றுப்புற, வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சரவையின் சுற்றுப்புற சூழல் ஒப்புதலை பெறுவது கட்டாயம். இந்த ஒப்புதலை பெற சுற்றுப்புற சூழல் தாக்க மதிப்பீட்டை செய்வது முன் நிபந்தனையாகும். இந்த திட்டத்தின் தன்மை, தாக்கம் , அதனால் ஏற்படும் சமாளிப்பதற்கான திட்டங்கள் மற்றும் பரிந்துரைகள் போன்றவற்றை சுற்றுப்புற சூழல் தாக்க மதிப்பீடு வெளிப்படுத்தும்.

தமிழ்நாட்டை சேர்ந்த சிலர்/சில அமைப்புகள் நீரகக்கரிம ஆய்வு மற்றும் உற்பத்திகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு செய்திருக்கிறார்கள்.நாகாலாந்து அரசு ஆய்வுக்கு அனுமதியளிக்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி அரசும் மக்களின் எதிர்ப்பை காரணம்காட்டி  தனது இயலாமையை தெரிவித்துள்ளது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கழகம் (ONGC ) மற்றும் மாநில அரசுகள், மக்களிடையே  இதனால் பேரழிவு ஏற்படும் என்ற அச்சத்தை நீக்க, மீத்தேன், ஷெல் வாயு போன்றவைகள் எடுக்கப்படுமா என்பது  குறித்த தவறான கருத்துக்களை களைய, நிலத்தடி நீருக்கு சிதைவு மற்றும் மாசு ஏற்படும்  என்ற எண்ணத்தைபோக்க, விவசாய நிலத்திற்கு ஏற்படும் விளைவுகள், ஆய்வு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளால்  ஏற்படக் கூடிய சிக்கல்கள், தொழில்நுட்பம், சட்ட ரீதியான விவரங்கள் போன்றவைகள் மாநில அரசுகளுக்கு முறையாக அளிக்கப்பட்டு  ஊடகங்களின் மூலமாக விளம்பரப் படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பரவலாக தெரிவிக்கப்பட்டன.

இந்த கிணறுகளில் இருந்து மீத்தேன் வாயு எடுக்கப்படாது என்று மத்திய அரசு பலமுறை தெளிவுபடுத்தியும், உறுதிபடுத்தியும், பல்வேறு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, மக்கள் கருத்தை கேட்ட பின்னர்தான், முறைப்படி இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சொல்லியிருப்பதோடு , பின்னர் மாநில அரசின் ஒப்புதலோடுதான் இந்த திட்டத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செயல்படுத்தும் என்பதையும் கூறியிருக்கிறார் அமைச்சர்.

ஆனால்,ஸ்டாலின் அவர்களும், மற்ற எதிர் கட்சியினரும், சில அமைப்புகளும் தொடர்ந்து இந்த விவகாரத்தை ஊதி ஊதி பெரி தாக்கி பதட்டத்தை ஏற்படுத்துவது தமிழகத்தின் நலனை, வளர்ச்சியை பாதிக்கும். தங்களின் சுய நலத்திற்காக, அரசியல் ஆதாயத்திற்காக வளர்ச்சி திட்டங்களை முடக்க நினைப்பது அடுத்த தலைமுறைக்கு செய்யும் மிகபெரிய துரோகம் என்பதை இவர்கள் உணர்வார்களா ?

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு மிகப்பெரி ...

சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிற ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்க ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு நாட்டின்வளர்ச்சிக்கு பெண்கள்முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமானபழக்கவழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடி ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்க ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...