தொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்

தொகுதிவளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் , தொழுநோய் ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் பாஜக எம்.பி.க்கள் பங்கேற்கவேண்டும் என்று மோடி அறிவுறுத்தியுள்ளார்.

தில்லியில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் அதிகளவிலான முதல்முறை எம்.பி.க்கள் பங்கேற்றனர். அவர்களிடம் மோடி கேட்டுக்கொண்டதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி கூறியதாவது:

நாடாளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் வருகை தராமல் இருப்பதற்கு கண்டனம்தெரிவித்த மோடி, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் போது அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்கவேண்டும்; மக்களின் பிரதிநிதியாக நமது கடமையை நாம் சரியாக செய்யவேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

அவர் மேலும் பேசுகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் கலந்துகொள்வது மட்டும் எம்.பி.க்களின் பணி அல்ல. தொகுதிவளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். குறிப்பாக, முதல்முறை எம்.பி. க்கள் தொகுதியின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கவேண்டும். ஒருவர் மீது முதல்முறை ஏற்படும் அபிப்ராயம் நல்லதாக இருக்க வேண்டும். ஏனெனில், அந்த அபிப்ராயம் கடைசியாகவும் இருக்கலாம். அதனால் அனைத்து எம்பி.க்களும் ஆர்வத்துடன் செயல்படவேண்டும். அதேபோல், யாரேனும் தனது கடமையை செய்யதவறினால் அவர்கள் குறித்து எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று மோடி அறிவுறுத்தினார்.

தொழு நோய், காச நோய் ஆகியவற்றை முழுமையாக ஒழிப்பதற்கு எம்.பி.க்கள் முயற்சி செய்யவேண்டும். 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை  முழுமையாக ஒழிக்கவேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக எம்பி.க்கள் பணியாற்ற வேண்டும்.

மனித உணர்வு களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விவகாரங்கள் மற்றும் சமூக  பிரச்னைகளுக்கு தீர்வுகாண எம்.பி.க்கள் முயற்சி செய்ய வேண்டும். உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து, தொகுதிவளர்ச்சிக்கு தேவையானதை நிறைவேற்ற வேண்டும் என்று எம்பி.க்களுக்கு மோடி அறிவுரை வழங்கினார் என அமைச்சர் ஜோஷி தெரிவித்தார்.

நாடாளு மன்றத்தின் இரு அவை நடவடிக்கைகளின் போது மத்திய அமைச்சர்கள் தவறாது பங்கேற்கவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி, அவைக்குவராது விடுப்பு எடுக்கும் அமைச்சர்களின் பெயர்பட்டியல் அதேநாளில் தன்னிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.  மத்திய அமைச்சர்கள் அவைக்கு தொடர்ந்து வருவதில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், அமைச்சர்களுக்கு மோடி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...