பயங்கரவாத தடுப்பு தொடர்பான சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. இச்சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள திருத்தங்கள் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
ஏனெனில், பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன என்ற சந்தேகம் ஏற்பட்டால், மாநில போலீஸாரின் அனுமதியின்றி எந்தமாநிலத்துக்கும் சென்று நடவடிக்கை எடுக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) இந்த சட்டத்திருத்தம் அதிகாரம் வழங்குகிறது.
சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புதெரிவித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, குரல்வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பயங்கரவாதத்தை வேருடன் அழிக்கும் வகையிலேயே இந்தச் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்தச் சட்டம் எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது. வாக்குவங்கி அரசியலுக்காக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யலாம். ஆனால், மத்தியஅரசு தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது.
முன்பு, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் இந்தமசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இப்போது பாஜக கூட்டணி ஆட்சியில் செய்யப்படும் திருத்தங்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்பது தெரியவில்லை.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தான் சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது, இச்சட்டம் மூலம் எதிர்க் கட்சிகள் பழிவாங்கப்பட்டன. கொள்கை என்ற பெயரில் சிலர் நகர்ப்புறங்களில் நக்ஸல் தீவிரவாதத்தை தூண்டிவருகின்றனர்; அவர்கள் மீது அரசு எவ்வித கருணையும் காட்டாது. பாஜக ஆட்சியில் இருக்கும் போது மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாதபோதும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம்காட்டி வந்துள்ளது என்றார்.
இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த திருத்தங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டன.
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |