தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தீவிரதாக்குதல்

பாக்  ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் உள்ள தீவிரவாதமுகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தீவிரதாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி யில் இருந்து ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச்சேர்ந்த 5 தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியிருப்ப தாகவும் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் வகையில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் மேலும் 15 தற்கொலைப்டை தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் தம்பி இப்ராஹிம் அசாரும் அங்கு முகாமிட்டுள்ளார் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தீவிரவாதிகள் ஊடுருவலை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் பயன் படுத்தும் கண்ணிவெடி குண்டுகள், தொலைநோக்கி பொருத்தப்பட்ட துப்பாக்கி உள்ளிட்டவை அமர்நாத் புனித யாத்திரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து அமர்நாத் புனித யாத்திரை நேற்று முன்தினம் ரத்துசெய்யப்பட்டது. அமர்நாத் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணி கள் உடனடியாக காஷ்மீரைவிட்டு வெளியேறுமாறு மாநில அரசு உத்தரவிட்டது.

பக்தர்கள், சுற்றுலா பயணிகளை வெளியேற்ற மாநில போக்குவரத் துத்துறை சார்பில் நேற்று ஏராளமான சிறப்புபஸ்கள் இயக்கப்பட்டன. ஜம்மு ரயில் நிலையத்தில் ஆயிரக் கணக்கானோர் குவிந்தனர். ஸ்ரீநகர், ஜம்மு விமான நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள், சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல விமானப் படையின் உதவியை காஷ்மீர் அரசு நாடியுள்ளது. அதன்படி, விமானப்படையின் சி-17 குளோப் மாஸ்டர் விமானம் மூலம் பயணிகளை அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 230 பயணிகளை அழைத்துச் செல்ல முடியும்.

ஸ்ரீநகரில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்தில் வெளிமாவட்டம், வெளிமாநில மாணவர்கள் ஏராள மானோர் கல்வி பயில்கின்றனர். தீவிரவாத அச்சுறுத்தல்காரணமாக அங்குள்ள மாணவர் விடுதி மூடப் பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சுமார் 800 மாணவர்கள் நேற்று தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். பாதுகாப்புகருதி காஷ்மீர் முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

காஷ்மீரின் கிஸ்ட்வார் மாவட் டம், மச்சைல் கிராமத்தில் துர்கை அம்மன்கோயில் உள்ளது. ‘மச்சைல் மாதா’ என்றழைக்கப்படும் இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை புனித யாத்திரை நடைபெறும். இந்த ஆண்டு புனிதயாத்திரை கடந்த 25-ம் தேதி தொடங்கியது. காஷ்மீரில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ‘மச்சைல் மாதா’ புனிதயாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

விஎச்பி அமைப்பு சார்பில் காஷ் மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் புத்தா அமர்நாத் யாத்திரை 10 நாட்கள் நடத்தப்படும். இந்தயாத்திரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விஎச்பி சார்பில் குல்காம் மாவட்டத்தில் நடத்தப்படும் நாக யாத்திரையும் ரத்து செய்ய பட்டிருக்கிறது.

ஸ்ரீநகர், ஜம்முவில் உள்ள விமானப் படைத் தளங்கள், மாநிலம் முழுவதும் உள்ள ராணுவ முகாம்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஜம்மு, ஸ்ரீநகரின் முக்கிய பகுதிகள் ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண் காணிக்கப் படுகின்றன. சிஆர்பிஎப் உள்ளிட்ட மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 38,000 வீரர்கள் காஷ்மீருக்கு கூடுதலாக அனுப்பப்பட்டு வருகின்றனர்.

தீவிரவாதிகளை ஊடுருவச்செய்ய ஏதுவாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்தபதிலடி கொடுத்து வருகிறது.

மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசிவருகிறது. இதில் தீவிரவாத முகாம்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள பொதுமக்கள் அவசரம் காட்டுகின்றனர். இதன்காரணமாக மளிகை கடைகள், மருந்துகடைகள், பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களிலும் நீண்டவரிசை காணப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தீவிரவாத அச்சுறுத்தல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரங்களை தாண்டி வேறு சில காரணங்களுக் காகவும் காஷ்மீரில் படைகள் குவிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வரும்சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி காஷ்மீரில் தேசிய கொடியேற்றி உரையாற்ற திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் காஷ்மீரை பிரித்து ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளை தனித்தனி மாநிலங்களாகவும் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...