ராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

அயோத்தி ராமர்கோயில் பிரச்னையில் இஸ்லாமிய சமூகத் தலைவர்களுடன் பேசி, நடுநிலையோடு தீர்வு காண முயற்சி மேற்கொண்டவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறினார்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 85 -ஆவது ஜயந்திஉத்ஸவம், மன்னார்குடியை அடுத்துள்ள இருள் நீக்கி கிராமத்தில்  மூன்று நாள்கள் நடைபெற்றது.
நிறைவுநாளான வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சியில் இல. கணேசன் பேசியது:

பாரத நாடு தோன்றியபோதே நாகரிகத்துடன் தோன்றியது. துறவிகள் வீதிக்குவரலாமா, மடத்திலேயே அமர்ந்து ஆசிர்வாதம் மட்டும் செய்யவேண்டும் என விமர்சனங்கள் எழுந்தபோதெல்லாம் அதைப்பற்றி கவலைப்படாமல், இந்து மதத்துக்கு வந்த பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றிகண்டவர் ஜயந்திர சரஸ்வதி சுவாமிகள்.

ஆதிதிராவிடர்கள், மீனவர்களிடம் அன்புகாட்டி அவர்கள் வசிக்கும் இடத்துக்கேசென்று அருளாசி நல்கியவர். அவரது பலகனவுகளை பாரத பிரதமர் மோடி  தற்போது நிறைவேற்றி வருகிறார். அயோத்தி ராமர்கோயில் பிரச்னையில் இஸ்லாமிய சமூகத் தலைவர்களுடன் பேசி நடுநிலையோடு தீர்வு காண முயற்சி செய்தவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றார் அவர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...