அயோத்தி நகரில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கு முன், பிரதமர் மோடி தமிழகத்தின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் புனித தலங்களில் சுவாமிதரிசனம் செய்யஉள்ளார்.
அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் நிலையில், பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்துக்கு வந்து, ரெங்கநாதரை தரிசித்து செல்வது ஏன் என்பது பற்றி, ஸ்ரீரங்கம் கோவில் தலைமை பட்டர் சுந்தர் கூறியதாவது:
ஜீவாத்மா, பரமாத்மாவை அடைவதற்கான வாழ்க்கை நெறிமு றைகளை சொல்லி கொடுத்தவர் அவதார புருஷனான ராமர். ராமன் அவதரித்ததால் அயோத்திக்குபெருமை. அயோத்தியின் தசரதவம்சத்திற்கு குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரைதான், ராமர் தினமும் தொழுதுவந்தார். அதனால், அயோத்தி மாநகருக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
ராம அவதாரம் நிறைவுகாலத்தில், தன்னிடம் அடைக்கலமாகி இருந்த அனைவருக்கும், ராமர் தனித்தனியாக பரிசு கொடுத்தார். அதில், ராவணனின் சகோதரரான விபீஷணனுக்கு, ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதரை பரிசாக கொடுத்தார்.
ராவணனை வெற்றி கொண்ட ராமர், இலங்கையை மீட்டு, விபீஷணனிடம் ஒப்படைத்தார். ராமர் கொடுத்த பரிசுடன் இலங்கைக்கு புறப்பட்ட விபீஷணன், ரெங்கநாதரை அவருடன் எடுத்துச்சென்றார்.
விபீஷணனால் எடுத்துச் செல்லப்பட்ட ரெங்கநாதர், முன்னரே சங்கல்பம் செய்தபடி, கொள்ளிடத்திற்கும், காவிரிக்கும் இடைப்பட்ட பகுதியில், ஸ்ரீரங்கத்தில் கிடந்தகோலத்தில் எழுந்தருளினார். அதனால், அயோத்தியும், ஸ்ரீரங்கமும் பிரிக்க முடியாத திவ்ய தேசங்களாக திகழ்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |