720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி

*720 மாணவர்களிடம் ரூ.42 கோடி வசூலித்து மோசடி !! தமிழககாங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரிக்கு இந்திய கப்பல் துறை நோட்டீஸ் !….*

*தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடத்தும் கல்லூரியில், மாணவர்களிடம் முறைகேடாக பலகோடி ரூபாய் வசூலித்த விவகாரம் தொடர்பாக விளக்கம்கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.*

*தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த திருநாவுக்கரசரை மாற்றி விட்டு, அவருக்கு பதிலாக கேஎஸ்.அழகிரி கடந்த சிலமாதங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப் பட்டார். இந்நிலையில், தற்போது மோசடி புகார் ஒன்றில் கேஎஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கி உள்ளனர்.*

*கே.எஸ்.அழகிரி தனது சொந்தமாவட்டமான சிதம்பரத்தில் மறைந்த காங்கிரஸ் தலைவர் காமராஜ் பெயரில் கல்லூரி ஒன்றை நடத்திவருகிறார். இந்த கல்லூரியின் உரிமையாளர்களாக அவரது மனைவி, மகள்கள் என குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இந்தகல்லூரியில் கப்பல் தொழில்நுட்ப சார்ந்த பல்வேறு படிப்புகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.*

*கப்பல் தொழில் நுட்பம் தொடர்பாக 6 மாதகால பயிற்சி அளிக்க 720 மாணவர்களிடம் ரூ.42 கோடி வசூலிக்கப்பட்டு, மேலும் பயிற்சிமுடிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கல்லூரி ஏற்படுத்தி தரும் எனவும் அறிவித்திருந்தது. அதில் ஒரு நாள் மட்டுமே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.*

*பயிற்சி அளிக்காமல் ஏமாற்றிவந்த கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் சார்பில் பல முறை முறையிட்டும், கல்லூரி நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை.மேலும் மாணவர்கள் பயிற்சிமுடித்தாக சான்றிதழ் வழங்கி கல்லூரி நிர்வாகம் மோசடி செய்துள்ளது.*

*இந்தவிவகாரம் தொடர்பாக அகில இந்திய கப்பல்துறை இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் மாணவர்களிடம் மோசடிசெய்த விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு விளக்கம்கேட்டு இந்திய கப்பல் துறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.*

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...