கல்விக்குச் சமமாக உடற்கல்வியை மேம்படுத்துவது அவசியம்

கல்விக்குச் சமமான அளவில் உடற்கல்வியை மேம்படுத்துவது அவசியம், குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த முழுமையான கல்வியளிப்பது அவசியமாகும். தேசவளர்ச்சியை கட்டமைப்பவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் குழந்தைகளிடம் ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம், நீதி, மதச் சார்பின்மை, மற்றவர்களின் நலன், மனித கண்ணியம், மனித உரிமைகளை மதிப்பது ஆகிய மதிப்பீடுகளை வளர்த்தெடுக்க வேண்டும். சிறந்த ஆசிரியர்களாக நடந்து கொள்வது தான் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாதிருஷ்ணனுக்கு புகழஞ்சலி செலுத்தும் வழியாகும்.

பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளிடம் கலந்துரையாடும்போது, குழந்தைகளின் பலம், பலவீனம், மனம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் புகழ்மிக்க வரலாறு, செறிந்த பாரம்பரியம், மரபுகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவது அவசியம். நீடித்தவளர்ச்சி, இயற்கையுடன் வாழ்தல் ஆகிய கருத்தாக்கத்தையும் போதனையில் இடம் பெறச் செய்யவேண்டும். கல்விக்குச் சமமாக உடற்கல்வியையும் ஊக்குவிப்பது அவசியமாகும்.

விளையாட்டுகளிலும், யோகாவிலும் மாணவர்கள் ஈடுபட ஊக்குவிக்கவேண்டும். வீடுகளில் குழந்தைகள் தங்களது தாய்மொழியில் பேசுவதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஊக்குவிக்க வேண்டும். ஆரம்பப்பள்ளிகளில் தாய்மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதேவேளையில், இயன்ற வரையில் பல மொழிகளைப் பயிலவேண்டும். புதிய மொழிகளைப் பயில்வதில் தயக்கம் கூடாது. எந்த மொழியையும் திணிக்கக்கூடாது; எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது. கல்வித் தளத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர அர்ப்பணிப்பு, நம்பிக்கை, தகுதியுடன்கூடிய ஆசிரியர்கள் நாட்டின் தேவையாக உள்ளது. தங்களது அறிவு, மனப்பான்மை, நடத்தை மூலம் அதிர்வுமிக்க தேசத்தின் அடித்தளத்தை உருவாக்கும் தனித்துவ மிக்க வாய்ப்பு ஆசிரியர்களிடம் உள்ளது .

குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...